Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படத்தில் சிவராஜ் குமார், மோகன்லால், தமன்னா, ஜாக்கி ஷெராஃப், சுனில், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக மாலை நடைபெற இருக்கிறது.
எனவே இதற்காக ஜெய்லர் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் 1000 ரசிகர்களுக்கு இலவசமாக பாஸ்கர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணத்தினால் ரஜினியின் பல்வேறு மாவட்டத்தில் இருக்கும் ரசிகர்கள் படையெடுத்து சென்னை வந்துள்ளனர். வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்ற பொழுது நடிகர் சரத்குமார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என விஜய்யை அழைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
எனவே இன்று நடைபெற இருக்கும் ஜெய்லர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசப்போகும் ஒவ்வொரு சினிமா பிரபலங்களும் ஒரே சூப்பர் ஸ்டார் குரலை எதிரொலிப்பார்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ரஜினியின் ஜெய்லர் படத்தில் இடம்பெற்றிருக்கும் காவாலா பாடல் வெளியாகி மிகவும் ட்ரெண்டிங்காக இருந்து வரும் நிலையில் இதனை அடுத்து இரண்டாவது சிங்கள் ஹுகும் மற்றும் மூன்றாவது சிங்களான ஜுஜுபி பாடல் முழுவதும் சோசியல் மீடியாவில் பிரபலமானது.
இவ்வாறு ஜெயிலர் படத்திற்கு ஆரம்பத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது எனவே கண்டிப்பாக ரஜினிக்கு இந்த படம் திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா போன்ற இந்திய சினிமா பிரபலங்கள் பங்கு பெற இருக்கும் நிலையில் அனைவரும் ரஜினியை புகழ்ந்து தர இருக்கிறார்கள்.
அதேபோல் ரஜினிகாந்த் கடைசியாக என்ன குட்டி கதை சொல்லப் போகிறார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இவர் இந்த குட்டி கதையின் மூலம் கண்டிப்பாக ரஜினிகாந்த் நல்ல அட்வைசை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.