ஜெயிலர் படத்தில் நடிக்க “மிர்னா மேனன்” வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

JailerJailer
Jailer

Jailer : சினிமா உலகில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு வெற்றி, தோல்வி வருவது சகஜம் அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக நடித்த தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் சரிவை வந்தன இதிலிருந்து மீண்டு வர இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் உடன் கைகோர்த்து ஜெயிலர் படத்தில் நடித்தார்.

ஆகஸ்ட் 10ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது படம் முழுக்க முழுக்க ஆக்சன், எமோஷனல், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு அற்புதமான படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

படம் வெளியாகி 13 நாட்கள் முடிவில் உலகம் எங்கும் சுமார் 525 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகின்ற நாட்களிலும் ஜெயிலர் படத்தின் வசூல் குறைய வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது இந்த நிலையில் ஜெயிலர் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் வாங்கும் சம்பளம் குறித்து பார்த்து வருகிறோம்.

அதன்படி ஜெயிலர் படத்தில் வசந்த ரவிக்கு மனைவியாகவும், ரஜினிக்கு மருமகளாகவும் நடித்த மிர்னா மேனன் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்து பார்க்க இருக்கிறோம்… மிர்னா மேனன் தமிழில் பட்டதாரி என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார்.

அதன் பிறகு களவாணி மாப்பிள்ளை, பிக் பிரதர் போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்த இவருக்கு  ஜெயிலர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து கைதட்டல் வாங்கியுள்ளார் இந்த படத்தில் நடிக்க மிர்னா மேனனுக்கு சுமார் 25 லட்சம் முதல் 30 லட்சம் வரை சம்பளம் வாங்கி இருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.