ஜெயிலர் படம் ஆவரேஜ் தான்.! ஆனா மக்கள் மத்தியில் ஹிட் அடிக்க காரணம் இந்த ஒத்த ஆளுதான் – ரஜினி புகழாரம்

Rajini

Jailer Movie : ஜெயிலர்  சக்சஸ் மீட்டில் ரஜினி பேசியது வைரலாகி வருகிறது அவர் சொன்னது என்னவென்றால்..  கலாநிதி மாறன் சாருக்கு நன்றி சொல்லணும் ஆடியோ லான்ச் தொடங்கி எல்லாத்தையும் சிறப்பாக செய்திருக்கிறார் படம் ஹிட்டான உடனே எல்லா கலைஞர்களையும் அழைத்து கறி விருந்து சாப்பாடு போட்டார் அப்புறமா எனக்கு, டைரக்டருக்கு, அனிருத்துக்கு என எல்லாத்துக்கும் கார் கொடுத்தார்.

இப்பதான் அந்த காரில் வந்தேன் எனக்கு இப்பதான் பணக்காரன் பீல் வந்து இருக்கு சத்தியமா சொல்றேன் காரில் உட்கார்ந்து வரும்போது சும்மா அப்படி இருந்துச்சு ஒரு படம் சக்சஸ் ஆச்சுன்னா அந்த படத்தை எப்படி கொண்டாடனும் அந்த கலைஞர்களை எப்படி கௌரவிக்க வேண்டும் என்று அப்படிங்கிறதுக்கு கலா சார் ஒரு உதாரணம் இது கோலிவுட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்கே..

இது ஒரு வழிகாட்டுதலாக இருக்கும் கலா சார் ஜோசியம் கூட பார்க்க ஆரம்பிச்சிடலாம் அவரோட கணிப்பு அப்படி இருக்கும் அணி படம் பார்த்துட்டு கலாநிதி சார் கிட்ட என்ன சார் பேட்டை பக்கத்துல வருமா என்று கேட்டார்கள் அதுக்கு கலா நிதி சார் இது 2023 பாட்ஷா என்று சொன்னாரு ஆடியோ லாஞ்சலையும் ரொம்ப ஓப்பனா படம் மெகா ஹிட் என்று சொன்னார்.

முதல்ல பின்னணி இசை இல்லாமல் படத்தை போட்டு காட்டினாங்க படம் பார்த்த செம்பியின் சார் படம் ஆவரேஜ் தான் என்றார் எனக்கும் அப்படித்தான் தோணுச்சு ஆனா அந்த படத்தை தூக்கி நிறுத்துனது அனிருத் தான் அவன் என்னோட மகன் எனக்கு ஹிட் கொடுக்கணும் நண்பனுக்கு ஹிட் கொடுக்கணும் அப்படின்னு அவர் அப்படி உழைத்தார் கேமராமேன் கார்த்தி எடிட்டர் என எல்லோருமே பெரிய உழைப்பை கொடுத்தாங்க..

Rajini
Rajini

ஸ்டண்ட் சிவா சொன்னதும் நான் ரொம்ப பயந்தேன் ஏன்னா தெலுங்குல பாலகிருஷ்ணன்வுடன் படம் பண்ணி இருக்கிறார் அப்படி இருக்கும்போது நமக்கு அப்படி தட புடானு ஏதாவது பண்ணிருவோம்னு பயந்தேன் ஆனால் நெல்சன் எதிர்பார்த்த மாதிரியே ரொம்ப ரியாலிட்டிக்காக பண்ணி கொடுத்தார் ஜெயிலர்  இவ்வளவு பெரிய மரியாதை கொடுத்தது அந்த படத்துல நடிச்ச விநாயகன் தான் என்று பேசினார்.