Jailer : நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று திரையரங்கில் வெளிவர இருக்கின்றன. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு ஜெயிலர் படத்திலிருந்து வெளிவந்த காவாலா பாடல் ரசிகர்கள் மத்தியில் இன்னும் ட்ரெண்டிங்கில் இருக்கின்றன. இதைத்தொடர்ந்து கடந்த ஜூலை 28ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
தற்போது ஜெயிலர் படத்தை திரையரங்கில் காண ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். அந்த ரசிகர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி கொடுக்கும் வகையில் ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வசந்த் ரவி இந்த படம் குறித்து பேசி உள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகர் வசந்த் ரவி பேசியது “ஜெயிலர் படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு காரணமே ரஜினி சார் அவர்களும்..
அவர்களுடன் நான் கற்றுக் கொள்ளும் விஷயங்களுக்காக தான்”. ரஜினி சார் என்னிடம் “நீ 70 வயதிலும் உன்னை பிசியான ஆளாக வைத்துக் கொள்ள வேண்டும்” என்று அறிவுரை கூறினார். மேலும் பேசிய அவர் ஜெயிலர் படம் உங்களை ஏமாற்றாது என உறுதியாக பேசினார்.
இயக்குனர் நெல்சன் திலிப் குமாரிடம் ரியாலஸ்டிக் மீட்டரை கமர்சியல் டெம்ப்ளேட்டில் சொல்லும் திறமை உள்ளது. மேலும் டார்க் காமெடியை டெட்பான் முகபாவனையுடன் சொல்லும் அவரது தனித்திறமை தமிழ் சினிமாவிற்கே புதிய ஒன்றாக இருந்தது. என ஜெயிலர் திரைப்படம் குறித்து வசந்த் ரவி பேசியிருக்கிறார்.