வசூலில் பாகுபலிக்கே டஃப் கொடுக்க போகும் ஜெயிலர்.? இதுவரை அள்ளிய கோடிகள் எவ்வளவு தெரியுமா.?

Jailer
Jailer

Jailer : இளம் தலைமுறை இயக்குனர்கள் தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்விக்கின்றனர் அந்த வகையில் லோகேஷ் கனகராஜ், ஹச். வினோத் ஆகியவர்களை தொடர்ந்து நெல்சன் திலீப்குமாரும் இந்த லிஸ்டில் இடம் பிடித்துள்ளார்.

இவர் எடுத்த கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் போன்ற படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கைகோர்த்து ஜெயிலர் என்னும் படத்தை எடுத்தார். படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலக அளவில் 4000 – த்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. படத்தில் ரஜினி உடன் இணைந்து சுனில், சிவராஜ் குமார்..

மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, விநாயகன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்து சூப்பராக நடித்தனர். மேலும் படத்தின் ஒவ்வொரு சீனும் ரசிக்கும் படி இருந்ததால் குடும்பத்தில் நல்ல வரவேற்பு பெற்று இதுவரை வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அதன் காரணமாக ரஜினியின் ஜெயிலர் படம்  மூளை முடுக்கு எங்கும் வசூல் வேட்டையும் நடைத்தி வருகிறது. முதல் நாளே 90 கோடிக்கு மேல் அள்ளி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது அடுத்தடுத்த நாட்களிலும்  படத்தின் வசூல் குறையவே இல்லை..

இந்த நிலையில் ஜெயிலர் படம் வெளியாகி இதுவரை உலக அளவில் 500 கோடியை கடந்து வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. வெகு விரைவிலேயே ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவான பாகுபலி படத்தின் 600 கோடி வசூலை  ஜெயிலர் முறியடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.