ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கும் “அனிருத்” வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

Jailer
Jailer

Jailer : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஜெயிலர். படம் வெளிவருவதற்கு முன்பே அடுத்தடுத்த அப்டேடுகளை கொடுத்து படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைக்க செய்தது . இதனால் டிக்கெட் புக்கிங் கூட போட்டி போட்டுக் கொண்டு ரசிகர்கள் வாங்கினார்.

படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் கோலாகலமாக வெளியானது ஜெயிலர் படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது ரஜினியின் மாறுபட்ட நடிப்பு, விநாயகத்தின் ரவுடிசம், யோகி பாபு காமெடி, தமன்னாவின் காவாலா, ரம்யா கிருஷ்ணனின் பயந்த நடிப்பு என அனைத்து காட்சிகளும் ரசிக்கும்படி இருந்ததால்..

படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார் இதனால் வசூலிலும் ஜெயிலர் திரைப்படம் ருத்ரதாண்டவம் ஆடியது. படம் வெளியாகி இதுவரை மட்டுமே 565 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் குறையாது என கூறப்படுகிறது.

இப்பொழுதும் கூட பல்வேறு திரையரங்குகளில் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஜெயிலர் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், இயக்குனர் என அனைவரும் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் என்பது குறித்து நாம் பார்த்து வருகிறோம்.

அதுபோல இசையமைப்பாளர் அனிருத் ஜெயிலர் படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்து நமக்கு தகவல் வந்துள்ளது ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றி அடைய காரணம் அனிருத் இசை, தீம் மியூசிக் போன்றவை வெறித்தனமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜெயிலர் படத்தில் இசையமைக்க அவர் 7 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

அனிருத் தொடர்ந்து டாப் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து வெற்றி கண்டு வருவதால் அவருடைய ஒவ்வொரு படத்திற்கும் சம்பளம் உயர்ந்து கொண்டே இருக்கிறது ஜெயிலர் படத்திற்கு பிறகு அவருடைய மார்க்கெட் பெரிய அளவில் உச்சியை தொடும் அதுமட்டுமல்லாமல் சம்பளத்தை உயர்த்தவும் வாய்ப்புகள் இருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன.