சும்மாதான் கேட்டேன் சூப்பர் ஸ்டார் கொடுத்துட்டாரு.! Jailer ஜாபருக்கு ரஜினி கொடுத்த பரிசு.!

Jaffer Sadiq rajini gift
Jaffer Sadiq rajini gift

Jailer Jaffer Sadiq : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடித்த திரைப்படம் தான் ஜெயிலர் இந்த திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் 7000 திரையரங்கிற்கு மேல் ரிலீஸ் ஆகியது. அது மட்டும் இல்லாமல் தமிழகத்தில் மட்டும் 1100 திரையரங்கிற்கு மேல் ரிலீஸ் ஆகி வசூலில் மாபெரும் வசூல் வேட்டை நடத்தியது.

மேலும் ஜெயிலர் திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் விநாயகன் மோகன்லால், சிவராஜ்குமார், யோகி பாபு, மிர்னா மேனன், தமன்னா என மிகப்பெரிய நட்சத்திரபட்டாலமே நடித்திருந்தார்கள் மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ஜாபர் .

நடிகர் ஜாஃபர் இதற்கு முன்பு வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், அது மட்டும் இல்லாமல் விக்ரம் திரைப்படத்தில் கமலஹாசனையே மிரட்டும் வில்லனாக நடித்திருந்தார். மேலும் ஜாபர் இன்னும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் இந்த நிலையில் ஜாபர் ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது தன்னுடைய காதலியை ரஜினியிடம் காட்டியதாகவும் அதற்கு உங்களது காதலி நன்றாக இருக்கிறாள் என ரஜினி கூறியதாகவும் அவர் கூறினார் அதுமட்டுமில்லாமல் ஒருமுறை ரஜினியை பார்க்க தன்னுடைய காதலியுடன் சென்றதாகவும் அதனால் தன்னுடைய காதலி மிகவும் குஷியானதாகவும் அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினி அணிந்திருந்த கூலிங் கிளாசை ரஜினி தனக்கு பரிசாக கொடுத்ததாக நடிகர் ஜாபர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அது மட்டும் இல்லாமல் இது குறித்து புகைப்படங்களையும் பகிர்ந்துள்ள அவர் அதில் நான் கேட்டேன் அவர் கொடுத்தார் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.