வசூலில் புதிய சாதனை படைத்த “ஜெயிலர்” – 8 நாள் முடிவில் உலக அளவில் அள்ளிய கோடிகள் எவ்வளவு தெரியுமா.?

jailer movie
jailer movie

Jailer : தமிழ் சினிமாவில் இன்று டாப் ஹீரோவாக வருவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இதுவரை திரை உலகில் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் அதில் பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் தான் இருந்தாலும் கடைசியாக நடித்த  தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் சுமாராக ஓடியதால்..

அடுத்து ஹிட் படம் கொடுக்க நெல்சன் உடன் கூட்டணி அமைத்து ஜெயிலர் படத்தில் நடித்தார். படம் ஒரு வழியாக ஆகஸ்ட் 10ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது படத்தில் ரஜினியின் வயதான கதாபாத்திரம் பலரையும் கவர்ந்து இழுத்தது, யோகி பாபு காமெடி, விநாயகத்தின் ரவுடிசம்..

சிவராஜ் குமார், மோகன்லால் ஆகிய அவர்களின் மாஸ் என்ட்ரி போன்றவை துள்ளலாட்டம் போட வைத்தன இதனால் ஜெயிலர் திரைப்படம் மூளை முடுக்கு எங்கும் வெற்றி நடை போட்டு வருகிறது. அதன் காரணமாக வசூலிலும் எந்த குறையும் வைக்கவில்லை. முதல் நாளே 90 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது.

அதை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் வசூல் அள்ளி வருகிறது இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படம் 8 நாள் முடிவில் உலக அளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

அதன்படி பார்க்கையில் உலக அளவில் சுமார் 430 கோடி வசூல் செய்து இருக்கிறதாம். தமிழகத்தில் மட்டுமே இதுவரை 100 கோடிக்கு மேல் ஜெயிலர் திரைப்படம் சொல்லித்தருகிறது என்பது கூடுதல் தகவல்.  500 கோடியே கடந்து திரை உலகில் ஒரு புதிய சாதனை படைக்கும் என பலரும் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.