அனைத்து ஏரியாவிலும் கல்லாகட்டும் “ஜெயிலர்”.. 4 நாட்கள் முடிவில் அள்ளிய கோடிகள் எவ்வளவு தெரியுமா.?

Jailer

Jailer : தமிழ் சினிமாவில் இன்று டாப் நடிகராக வருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தர்பார், அண்ணாத்த திரைப்படங்கள் சுமாராக ஓடின இதனால் ரஜினி மார்க்கெட் இறங்கி விட்டது என பலரும் விமர்சித்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 169-வது திரைப்படம் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக இருக்க வேண்டும் என நினைத்தார். இதற்காக இளம் இயக்குனர்களுடன் கதை கேட்டார் ஆனால் பலரும் பிரம்மாண்டமாகவும், ஒரு சிலர் ஒன் லைன் கதையுடன் வந்துள்ளனர்.

இது எல்லாம் ரஜினி ஒவ்வொன்றாக தவிர்த்தார். நெல்சன் சொன்ன ஜெயிலர் கதை ரொம்ப பிடித்து போகவே அதிரடியாக படம் உருவானது படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவராஜ்குமார், மோகன்லால், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு,  தமன்னா, ரம்யா கிருஷ்ணன் ரெடின் கிங்ஸ்லி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்தனர்.

படம் ஒரு வழியாக ஆகஸ்ட் 10ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது படம் எதிர்பார்த்ததைவிட மாஸ் ஆக்சன், சென்டிமென்ட், காமெடி என அனைத்தும் அற்புதமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆன்டியன்ஸ் படத்தை கொண்டாட ஆரம்பித்தனர் அதனால் ஜெயிலர் படத்தின் வசூல் முதல் நாளே அதிகரிக்க ஆரம்பித்தது.

இந்த நிலையில் படம் வெளியாகி நான்கு நாட்கள் ஆகிய உள்ள நிலையில் இதுவரை எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதன்படி பார்க்கையில் ஜெயிலர் திரைப்படம் இதுவரை உலக அளவில் 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாளை ஆகஸ்ட் 15 என்பதால் ஜெயிலர் படத்தின் வசூல் இன்னும் கூடுதலாகும் என கூறப்படுகிறது.