Jailer Box office : நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிய ஜெயிலர் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் வசூலில் அதிர வைத்துள்ளது. அப்படி இருக்கும் நிலையில் இரண்டாவது நாளில் 105 கோடியை கடந்து விட்டதாக சொல்லப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்ச்சர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜெயிலர் இந்த திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது. கிட்டத்தட்ட 7000 திரையரங்கிற்கு மேல் இந்த திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அனிருத் இசையில் ஜெயிலர் திரைப்படத்தின் பாடல் ஏற்கனவே ஹிட் அடித்து உள்ளது.
மேலும் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன் லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகம் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள், ரஜினி நடிப்பில் வெளியாகிய பேட்ட, தர்பார், அண்ணாத்த ஆகிய கடைசி திரைப்படங்கள் பெரிதாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.
அதனால் ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து மீண்டும் கம்பக் கொடுப்பாரா என மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருந்தது ஏனென்றால் ஜெயிலர் திரைப்படத்திற்கு அதிகாலை காட்சி கிடையாது என கூறியிருந்தார்கள் அதனால் பாக்ஸ் ஆபிஸில் வசூல் குறித்து சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்திற்கு முதல் நாளிலிருந்து தரமான ஓப்பனிங் கிடைத்து வருகிறது.
பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஜெயிலர் தரமான சம்பவம் செய்துள்ளது ஏற்கனவே முதல் வாரத்திற்கான டிக்கெட்கள் அனைத்தும் புக்கிங் ஆகிவிட்ட நிலையில் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 24 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டது இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் 49 கோடி வரை கலெக்ஷன் செய்ததாக சொல்லப்பட்டது முதல் நாளில் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 90 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில் இரண்டாவது நாளான நேற்று காட்சிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் வசூலில் கொஞ்சம் மந்தம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
ஆனாலும் தமிழ்நாடு உட்பட இந்திய முழுவதும் 30 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன இப்படி இரண்டாவது நாளில் உலகம் முழுவதும் பத்து கோடிக்கு மேல் கலெக்ஷன் செய்துள்ளதாம் முதல் இரண்டு நாளிலேயே ஜெயிலர் திரைப்படம் 105 முதல் 115 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வல்லுநர்கள் கணித்து கூறியுள்ளார்கள்.
ஆனால் இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.