பட்டிதொட்டி எங்கும் பறக்கும் ரஜினியின் “ஜெயிலர்” கொடி.. 15 நாட்கள் முடிவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

Jailer
Jailer

Jailer : தமிழ் சினிமாவில் No. 1 நடிகராக வருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் கடைசியாக நடித்த தர்பார், அண்ணாத்த சுமாராக ஓடியதை தொடர்ந்து இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து ரஜினி நடித்த திரைப்படம் ஜெயிலர்.

சூப்பர் ஸ்டாருடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த ரவி, விநாயகன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், மாரிமுத்து மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்தனர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் எங்கும் 4000 திறக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.

படத்தில் ரஜினியின் மாறுபட்ட நடிப்பு, விநாயகத்தின் ரவுடிசம், சிவ ராஜ்குமார், மோகன்லால் ஆகிய அவர்களின் மாஸ் என்ட்ரி யோகி பாபு காமெடி என அனைத்தும் அற்புதமாக இருந்ததால் இளசுகள்  தொடங்கி முதியவர் வரை பலரும் போட்டி போட்டுக் கொண்டு படத்தை பார்த்து வருகின்றனர்.

இதனால் ஜெயிலர் படத்தின் வசூல் வேட்டையாட ஆரம்பித்தது முதல் நாளே 90 கோடிக்கு மேல் அள்ளியது அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் வசூல் குறையவே இல்லை..  இதனால் பல்வேறு டாப் நடிகர்களின் வசூல் சாதனையை முறையடித்து முன்னேறிக் கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் படம் வெளியாகி 15 நாட்கள் முடிந்து நிலையில் எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து நமக்கு தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை சுமார் 550 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாரத்திற்குள்ளேயே ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் 600 கோடியை தொட்டு ஒரு புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.