Jailer : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஜெயிலர். ஆகஸ்ட் 10ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை முதல் நாளே ரசிகர்களையும் தாண்டி மக்கள் போட்டி போட்டுக் கொண்டு பார்த்தனர்.
ஜெயிலர் படம் ரீலிஸ் ஆவதற்கு முன்பே வெளிவந்த அப்டேட்டுகள் ஒவ்வொன்றும் மாஸாக இருந்த காரணத்தினால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது படம் வெளிவந்து. படம் திரைக்கு வந்து அதை பூர்த்தியும் செய்தது. ஜெயிலர் படத்தின் கதைகளம் சிறப்பாக இருந்தது.
மேலும் ரஜினியின் மாறுபட்ட நடிப்பு, விநாயகத்தின் ரவுடிசம் மற்ற நடிகர், நடிகைகளும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்திருந்தனர்.
இதனால் பட்டி தொட்டி எங்கும் ஜெயில்ர் படத்தை போட்டி போட்டு பார்த்து வருகின்றனர். அதன் காரணமாக ஜெயிலர் படத்தின் வசூலிலும் எந்த குறையும் வைக்கவில்லை..
நேற்றுடன் 510 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய நிலையில் 13 நாட்கள் முடிவில் ரஜினியின் ஜெயிலர் படம் எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் ஜெயிலர் படம் வெளிவந்து உலக அளவில் 13 நாட்களில் சுமார் 525 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. இப்படி வசூல் செய்யும் பட்சத்தில் இயக்குனர் ராஜமௌலியின் பாகுபலி படத்தின் 600 கோடி வசூல் சாதனையை ஜெயிலர் முறியடிக்கும் என பலரும் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.