வசூலில் தான் கில்லி என்பதை நிரூபித்த சூப்பர் ஸ்டார்..! 12 நாட்கள் முடிவில் “ஜெயிலர் படம்” அள்ளிய கோடிகள் எவ்வளவு தெரியுமா.?

Jailer
Jailer

Jailer : தமிழ் சினிமாவில் இன்று நம்பர் ஒன் ஹீரோவாக வருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.  இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் சுமார் 4000 த்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.  படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து சிவராஜ்குமார்..

மோகன்லால், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருந்தனர் இருந்தாலும் ஜெயிலர் படத்தில் பெரிதும் பேசப்பட்ட கதாபாத்திரங்கள் ரஜினியின் மாறுபட்ட நடிப்பு, விநாயகத்தின் ரவுடிசம், சிவராஜ் குமார் – மோகன்லால் ஆகியவர்களின் என்ட்ரி என அனைத்தும் ரசிக்கும்படி..

இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்பன்ஸ் மத்தியில் நல்ல கைதட்டல் வாங்கி தற்போது  ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டையும் தாண்டி ஆந்திரா கர்நாடகா கேரளா என அனைத்து இடங்களிலுமே நல்ல விமர்சனத்தை பெற்று வசூலிலும் எந்த குறையும் வைக்காமல் அள்ளி வருகிறது. இதுவரை மட்டுமே பல டாப் நடிகர்களின் வசூல் சாதனையை முறியடித்து உள்ளது.

ஜெயிலர் படம் வருகின்ற நாட்களில் பாகுபலி, பாகுபலி 2 போன்ற படங்களின் வசூல் சாதனையையும் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி 12 நாட்கள் முடிந்த நிலையில் இதுவரை அள்ளிய வசூல் எவ்வளவு என்பது குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

அதன்படி பார்க்கையில் ஜெயிலர் திரைப்படம் 12  நாள் முடிவில் உலக அளவில் சுமார் 510 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாம். வெகு விரைவிலேயே 600 வசூலை ஜெயிலர் படம் நெருங்குவது உறுதி என பலரும் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.