Jailer : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம். ரஜினி உடன் கைகோர்த்து சிவராஜ் குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, தமன்னா, ரெடின் கிங்ஸ்லி, மாரிமுத்து, விநாயகன், சுனில் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர்.
ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது படம் முழுக்க முழுக்க ஆக்சன், எமோஷனல், காமெடி என அனைத்தும் கலந்து இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
13 நாட்கள் முடிவில் மட்டுமே ஜெயிலர் திரைப்படம் சுமார் 525 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக கூறப்படுகிறது. வருகின்ற நாட்களிலும் ஜெயிலர் படத்தின் வசூல் குறைய வாய்ப்பு இல்லை என கணக்கிடப்படுகிறது இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படம் தமிழ்நாட்டையும் தாண்டி மற்ற ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் வெளிநாடுகளிலும் நல்ல வசூலை அள்ளி வருகிறது.
இந்த நிலையில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் இலங்கையிலும் நல்ல வசூலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இலங்கையில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி 11 நாள் முடிவில் எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது.
அதன்படி பார்க்கையில் அங்கு 11 நாள் முடிவில் மட்டுமே சுமார் 17.5 கோடி வசூல் செய்து உள்ளதாம் இந்திய மதிப்பில் இதனுடைய மதிப்பு சுமார் 4.5 கோடி என சொல்லப்படுகிறது. வருகின்ற நாட்களில் இலங்கையில் ஜெயிலர் படத்தின் இன்னும் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.