Anirudh : “3”படத்தில் ஒய் திஸ் கொலவெறி பாடலுக்கு இசை அமைத்து அறிமுகமாகினார். இவர் இசையமைத்த முதல் பாடலே youtubeபில் எண்ணற்ற பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. அன்றிலிருந்து இவருடைய வளர்ச்சி ஆரம்பித்தது. தற்பொழுது பெரும்பாலான இயக்குனர்கள் நடிகர் நடிகைகளை விட..
முதலில் படத்தின் பாடலுக்கு இசையமைக்க அனிருத்தை தேர்வு செய்து விடுகின்றனர்.. அந்த அளவிற்கு முன்னணி இசையமைப்பாளராக மாறியுள்ளார் அனிருத்.. கடைசியாக கூட இவர் தமிழ் சினிமாவின் இரு முக்கிய தூண்களான கமலின் விக்ரம், ரஜினியின் ஜெயிலர் போன்ற இரு நடிகர்களின் படங்களுக்கு..
அனிருத் தான் இசையமைத்திருந்தார் இவரது இசையில் வெளிவந்த ஒவ்வொரு பாடலும் வெறித்தனமாக இருந்தது. தற்பொழுது கூட சில தினங்களுக்கு முன்பு வெளியாகி திரையில் வெற்றி நடை கண்டு வரும் பான் இந்திய படமான ஜவான் படத்திற்கு கூட அனிருத் தான் இசையமைத்திருந்தார்.
இந்த நேரத்தில் கடந்த மாதம் வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இந்த படத்தின் நடிகர், இயக்குனருக்கு காசோலை மற்றும் சொகுசு காரை பரிசாக வழங்கியதை தொடர்ந்து அனிருத்திற்கும் 1.5 கோடி மதிப்புள்ள காரை பரிசாக வழங்கியிருக்கிறார். அதன் புகைப்படங்கள் கூட சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகின.. அதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்..
என்னதான் அனிருத்திற்கு ஜெயிலர் படத்திற்காக கார் கிடைத்து இருந்தாலும் அவருக்கு எப்பொழுதுமே மிகபெரிய கிப்ட் என்றால் விக்ரம் படம் தானாம்.. அதற்கு மேல் தனக்கு வேறு எதுவும் வேண்டாம், விக்ரம் படத்தின் வெற்றியே தனக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் என அனிருத் தனக்கு நெருங்கியவர்களிடம் சொல்லி இருக்கிறாராம்..