Jaffer Sadiq in jailer : தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடன இயக்குனராக பணியாற்றி வந்தவர் ஜாபர் சாதிக் இவர் முதன் முதலில் சினிமா உலகில் பாவ கதைகள் என்ற அந்தாலாஜி தொடரின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இதில் விக்னேஷ் சிவன் இயக்கிய குறும் திரைப்படத்தில் வில்லனாக மிரட்டி அசத்தியிருந்தார்.
இவரின் நடிப்பு திறமையை பார்த்த கோலிவுட் இயக்குனர்கள் பலரும் இவருக்கு பட வாய்ப்பு வழங்கி வருகிறார்கள் அந்த வகையில் கௌதமேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகிய வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார் அதனைத் தொடர்ந்து கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய விக்ரம் திரைப்படத்திலும் கமலஹாசனுக்கு நிகராக ரவுடி கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார்.
இப்படி முன்னணி நடிகரின் திரைப்படங்களில் வில்லனாக மிரட்டி வந்த ஜாபர் சாதிக் சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகிய ஜெயிலர் என்ற திரைப்படத்திலும் காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர் இந்த திரைப்படத்தில் சிவராஜ்குமார் ரவுடி கும்பலில் ஒருவராக இருந்தார் ஆனால் இவர் கடைசி வரை ரஜினியுடன் ஒன்றிய கதாபாத்திரமாக படத்தில் காட்டி இருந்தார்கள் அதேபோல் இந்த திரைப்படத்தில் நடித்த ஜாபர் சாதிக் அவர்களுக்கு பாராட்டுகளும் கிடைத்தது இதனைத் தொடர்ந்து ஜவான் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி உள்ளார்.
விரைவில் ஜவான் திரைப்படமும் வெளியாக இருக்கிறது அதாவது வருகின்ற செப்டம்பர் மாதம் தான் ஜவான் திரைப்படம் வெளியாக இருக்கிறது. ஜாபர் சாதிக் தன்னுடைய காதலை பற்றி முதன்முறையாக ரஜினிகாந்த் விசாரித்தது பற்றி பேட்டியில் கூறினார் அப்பொழுது ரஜினி எப்பொழுது கல்யாணம் என அடிக்கடி கேட்டுக் கொண்டிருப்பாராம் ஒரு நாள் என்னுடைய காதலியின் போட்டோவை ரஜினி அவர்களிடம் காட்டினேன் உங்கள் காதலி நன்றாக இருக்கிறார் என ரஜினி கூறியதாக ஜாபர் கூறினார்.
அதுமட்டுமில்லாமல் தன்னுடைய காதலியுடன் ரஜினி சாரை பார்க்க ஜாபர் சென்றுள்ளார் அப்பொழுது தன்னுடைய காதலி மிகவும் குஷி ஆகிவிட்டதாக ஜாபர் சாதிக் கூறி இருந்தார் இந்த நிலையில் ஜாபர் மற்றும் அவருடைய காதலி சித்திகா ஷெரின் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக வருகிறது.