விஜய்க்கு “ஜெயிலர்” மட்டும் போட்டி கிடையாது.? காத்துக் கொண்டிருக்கும் ஸ்டார் நடிகர்களின் படங்கள்.. தளபதி மாஸ் காட்டுவாரா

Leo
Leo

Leo : லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்கள் அனைத்தும் பெரிய வெற்றியை பதிவு செய்கின்றன கடைசியாக கமலை வைத்து லோகேஷ் எடுத்த விக்ரம் திரைப்படம் 420 கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்தது அடுத்ததாக விஜயை வைத்து லியோ படத்தை எடுத்து வருகிறார் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த படம் பெரிய வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது தற்பொழுது ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர்  திரைப்படம் இதுவரை 525 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய நிலையில் எப்படியும் 600, 700 கோடி வரை கடைசி வரை போகும் என சொல்லப்படுகிறது இந்த வசூலை லியோ முறியடிக்குமா என்கின்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

லியோவுக்கு ஜெயிலர் மட்டும் போட்டி கிடையாது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது அந்த படம் வெளிவந்து குறைந்தது 700 லிருந்து 1000 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிரபாஸின் சலார் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்குவதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது. இந்த படம் நிச்சயம் 1000 கோடி வரை வசூல் செய்ய வாய்ப்புகள் இருக்கிறது இதனால் லியோ படத்திற்கு மிகப்பெரிய ஒரு போட்டி இருக்கிறது என்பது தெரிய வருகிறது.

லியோ திரைப்படம் நடிகர்களுக்காக எடுக்காமல்  நல்ல கான்செப்ட் இருக்கும் பட்சத்தில் இந்த படம் இந்த அனைத்து படங்களின் வசூலையும் முறையடிக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. பொறுத்து இருந்து பார்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..