ஜெயிலர் திரைப்படம் ரொம்ப நல்ல படம்னு சொல்ல முடியாது – பிரபல தயாரிப்பாளர் கொடுத்த விமர்சனம்.! கடுப்பான ரசிகர்கள்

Jailer movie

Jailer : தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கு மேலாக நடித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. ரிலீசுக்கு முன்பு  படத்தில் இருந்து வெளிவந்த அப்டேட்டுகள் ஒவ்வொன்றும்  சிறப்பாக இருந்ததால்..

ஜெயிலர் படத்தை மக்கள் மற்றும் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு பார்த்தனர் படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது குறிப்பாக ரஜினி, விநாயகன் போன்றவர்களின்  நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது அதனால் படம் நல்ல விமர்சனத்தை பெற்று பட்டி தொட்டி எங்கும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இரண்டு நாள் முடிவில் மட்டுமே 100 கோடிக்கு மேல் ஜெயிலர் திரைப்படம் வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  வருகின்ற நாட்கள் சனி, ஞாயிறு  என்பதால் ஜெயிலர் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. ஜெயிலர் படம் சூப்பராக ஓடிக் கொண்டிருந்தாலும் ரஜினி அதைக் கொண்டாடவில்லை  அமைதியைத் தேடி இமயமலைக்கு சென்றுள்ளார் .

அதன் புகைப்படங்களும் தற்பொழுது ரஜினி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படம் சுமாரான படம் தயாரிப்பாளர் ஒருவர் கூறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அவர் வேறு யாரும் அல்ல… சித்ரா லக்ஷ்மணன் தான்.

chitra laxmanan
chitra laxmanan

இவர் ஜெயிலர் முழுவதையும் பார்த்துவிட்டு விமர்சனம் கொடுத்துள்ளார் அவர் சொன்னது… ஜெயிலர் திரைப்படம் நல்ல படம்னு சொல்ல முடியாது. மோசமான படம் இன்னும் சொல்ல முடியாது படத்தின் கதையை படம் முழுக்க ரஜினி சுமந்து இருக்கிறார் இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம் என்று கூறினார்.  இதற்கு பலரும் எதிர்ப்பும், ஆதரவும் கொடுத்து வருகின்றனர்.