என்ன ஜெயிக்க எவன்டா இருக்கான்.! 100 கோடியே நெருங்கிய ஜெயிலர்.. காலரை தூக்கி விட்டு கெத்து காட்டும் ரஜினி.!

jailer first day collection
jailer first day collection

Jailer box office: நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜெயிலர் இந்த திரைப்படத்தில் வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, மோகன்லால், சிவராஜ்குமார், யோகி பாபு என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள் இந்த திரைப்படம் நேற்று ஆகஸ்ட் பத்தாம் தேதி உலகம் முழுவதும் 7000 திரையரங்கத்திற்கு மேல் ரிலீஸ் ஆகியது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 1100 திரையரங்குக்கு மேல் ரிலீஸ் ஆகி உள்ளது.

இப்படி சூப்பர் ஸ்டாரின் திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது மேலும் ஜெயிலர்   திரைப்படத்திற்கு அனிருத் அவர்கள் தான் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் கலந்த காமெடி திரைப்படம் தான்  ஜெயிலர்  மேலும் திரைப்படத்தில் தமன்னா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் படத்தை மிகவும் பிரம்மாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படி திரையரங்கில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் ஜெயிலர் திரைப்படம் வசூலிலும் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. பல்வேறு சாதனைகளை வசூலில் படைத்து வருகிறது ஜெய்லர் திரைப்படம். இந்த திரைப்படம் உலக அளவில் 95.78 கோடி வசூலித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதனால் முதல் நாளிலேயே அதிக வசூல்  செய்த திரைப்படமாக ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

தமிழகத்தில் ஜெயிலர் திரைப்படம் 29.4 கோடி வசூல் செய்தது அதேபோல் ஆந்திராவில் ஒரே நாளில் 12.04 கோடி வசூலித்துள்ளது ஆனால் ஆந்திராவில் ரஜினியின் மவுசு அதிகரித்துள்ளதால் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் கர்நாடகாவில் ஜெயிலர் திரைப்படம் 11.92 கோடி வசூலித்தது ஏற்கனவே கர்நாடகாவில் 10.9 கோடி வசூலித்து முதல் இடத்தில் இருந்த கபாலி திரைப்படத்தின் வசூலை ஜெயிலர் திரைப்படம் முறியடித்துள்ளது.

இதனை தொடர்ந்து கேரளாவில் 5.38 கோடியும் வசூலித்துள்ளது இதன் மூலம் ஏற்கனவே வாரிசு 3.5 கோடி வசூலித்து முதலிடத்தில் இருந்த நிலையில் தற்போது அந்த சாதனையை ஜெயிலர் திரைப்படம் முறியடித்துள்ளது. பாக்ஸ் ஆபீஸில் தற்பொழுது தான் கிங்க என நிரூபித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மற்ற மாநிலங்களில் 4.23 கோடியும் வசூலித்த நிலையில் வெளிநாட்டில் மட்டும் ஜெயிலர் திரைப்படம் 32.75 கோடி வசூலித்தலைதாக கூறப்படுகிறது இதன் மூலம் தமிழ் சினிமா உலகில் தரமான சம்பவம் செய்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி.