தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வெற்றி ருசித்தார் அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் இவருக்கு ஆரம்பத்திலிருந்து டாப் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அதை சரியாக பயன்படுத்தி நடித்ததால் நடிகை தமன்னா .
முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை தமிழ் சினிமாவில் பெற்றதோடு மட்டுமல்லாமல் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக்கொண்டார். இவர் தமிழில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் போன்ற நடிகர்களுடன் நடித்த அசத்தியவர் தொடர்ந்து சினிமா உலகில் வெற்றியை ருசித்தாலும் அண்மைக்காலமாக தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.
இருப்பினும் அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் தனக்கு ரசிகர்கள் இருந்தால் போதும் என தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அள்ளி வீசி அசத்தினார் இதனால் ரசிகர்கள் இவருக்கு ஏராளமாக எப்பொழுதும் இருக்கின்றனர் இந்த நிலையில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் கம்பேக் கொடுப்பார்.
என ரசிகர்கள் சொல்லி வந்தது போல தற்போது ரஜினியின் 169-வது திரைப்படமான ஜெயிலர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னாவுக்கு ஒரு சின்ன வேடம் தானாம்.
இதனால் தமன்னா படத்தில் வந்து மட்டுமே போவார் என சொல்லப்படுகிறது இது தற்பொழுது தமன்னா ரசிகர்களையும் சரி தமன்னாவையும் சரி சற்று அப்செட் ஆக்கி உள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது இதுவரை சரியாக தெரியவில்லை ஆனால் இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு பெயரலாகி வருகிறது.