ஜெயிலர் இரண்டாம் பாகம்..? ஒரே படத்தில் ரஜினி, விஜய்யை வைத்து இயக்க ஆசை.? பிரபல இயக்குனர் அதீத ஆசை.. இது என்னாடா புது உருட்டா இருக்கு.!

jailer 2nd part
jailer 2nd part

Jailer : நெல்சன் திலீப் குமார் ஓர் இந்திய திரைப்பட இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார் இவர் முக்கியமாக தமிழ் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். இவர் இயக்கிய முதல் திரைப்படமான கோலமாவு கோகிலா என்ற படத்திற்காக நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை பெற்றார்.

தற்போது இவர் இயக்கத்தில் வெளியான “ஜெயிலர்” திரைப்படம் ரஜினிகாந்த் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் முக்கிய கதாபாத்திரங்களாக மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் போன்ற பல பிரபலமான கதாபாத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

பெரும்பாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அனைத்து படங்களும் வெற்றியை அள்ளிக் குவித்துள்ளன. எப்பொழுதும் தான் சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்துள்ளார். இந்த படம் 200 கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது.

நெல்சனின் இயக்கமும் ரஜினியின் நடிப்பும் சேர்ந்து சிகரத்தை தொட்டுள்ளனர். இதில் பங்கேற்ற அனைத்து படக்குழுவினரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இதைப் பற்றி இயக்குனர் நெல்சனிடம் கேட்ட பொழுது,” ஜெயிலர்”படத்தின் இரண்டாம் பாகமும் எடுக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தார். மேலும் அவர் இயக்கிய “கோலமாவு கோகிலா, டாக்டர், பிஸ்ட்” படங்களின் இரண்டாம் பாகங்களை இயக்கம் திட்டம் உள்ளது என்று கூறினார்.

அதே சமயம் அவர் கூறும் போது “இரண்டு மாஸ் ஹீரோக்களை வைத்து படம் ஒன்றை இயக்க எனக்கு ஆசை இருக்கிறது. ரஜினிகாந்த் மற்றும் விஜய் இருவரையும் இணைத்து படம் ஒன்றை இயக்க திட்டம் உள்ளது. இரு பெரும் மாஸ் ஹீரோக்களை வைத்து படம் செய்வது மிகப்பெரிய பணிதான். அதை, நேரம் வரும்போது கண்டிப்பாக நிச்சயம் செய்வேன்” என்றார்.