Jailer Audio Lunch : சூப்பர் ஸ்டார் ரஜினி நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர் தயாரிப்பில் நடித்து வரும் திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கிசாரப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள் மேலும் இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி பிரமாண்டமாக திரைக்கு வர இருக்கிறது.
ஏற்கனவே ஜெயிலர் மற்றும் லியோ திரைப்படத்திற்கு இடையே ஆன மிகப்பெரிய போட்டி நிலவுகிறது ஏனென்றால் லியோ திரைப்படத்தில் நான் ரெடி பாடல் வெளியாகி பட்டித்தொட்ட்டி எங்கும் பிரபலமானது அதற்கு போட்டியாக ஜெய்லர் திரைப்படத்திலிருந்து காவாலா என்ற பாடலை படக்குழு வெளியிட்டது இந்த பாடல் வெளியாகி நான் ரெடி பாடலின் சாதனையை முறியடித்தது.
இதில் ஒரு விஷயம் என்னவென்றால் இரண்டு படத்திற்கும் இசையமைப்பாளர் அனிருத் தான். அப்படி இருக்கும் நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் ரஜினி குட்டி ஸ்டோரி ஒன்றை கூறினார் இந்த குட்டி ஸ்டோரி பிரச்சனை தான் மிகப்பெரிய பூதகரமாக வெடித்துள்ளது. ஏனென்றால் இவர் சொன்ன குட்டி ஸ்டோரி விஜய்யை தாக்கியது போல் இருக்கிறது என பலரும் விமர்சனம் செய்து வந்தார்கள்.
குட்டி ஸ்டோரி சொன்ன ரஜினி தொடர்ந்து பேசுகையில் யோகி பாபு உடன் காரில் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது சில சூட்டிங் செய்து கொண்டு இருந்தோம் அப்பொழுது எக்ஸ்பிரஷன் ஷார்ட் அங்கிருந்து மைக்கில் கூறினார்கள் உடனே மைக்கில் கொஞ்சம் அதிகமாயிடுச்சு.. இல்ல இப்ப கம்மியாகிடுச்சு.. இப்ப ரொம்ப அதிகமாயிடுச்சு.. என ஒவ்வொரு மாதிரியாக சொல்லிக் கொண்டே இருந்தார் இயக்குனர் அப்பொழுது யோகி பாபு சரி சரின்னு சொல்லிட்டு பின்பு ஷாட் ஓகே ஆனதும் சூப்பர் ஸ்டார் ரஜினி சாரிடம் இவன் சாவடிக்கிறான் சார் ஸ்கேல் வைத்து அளந்தா நடிக்க முடியும் என கலகலப்பாக யோகி பாபு கூறினார் என ரஜினி மேடையில் பேசினார்.
அதன் பிறகு ரம்யா கிருஷ்ணன் பற்றி பேசிய ரஜினி 32 வருடம் கழித்து மீண்டும் இணைந்து நடித்துள்ளோம் ஒரு காட்சியில் அவருக்கு ஒரு எக்ஸ்பிரஷன் கொடுத்து விட்டு பக்கத்தில் இருக்கும் மற்றொருவருக்கு வேறொரு எக்ஸ்பிரஷன் கொடுக்கணும் இதற்கு 8 டேக்குகள் ஆனது அந்த நீலாம்பரி முன்னால் இந்த படையப்பாவோட மானம் மரியாதையே கெடுத்துட்டாங்க எனக் கூறிய ரஜினி சீரியஸ் சீனில் காமெடி வரும் எனவும் கூறியுள்ளார்.