ஜெயிலர் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? சம்பளத்தை குறைத்த “சூப்பர்ஸ்டார்”

jailer actors

Jailer : அண்ணாத்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது அதற்கு முன்பாக ஜெயிலர் படக்குழு அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்து படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

கடைசியாக கூட ஜெயிலர் படத்தின் show case வெளிவந்து பட்டையை கிளப்பியது இந்த நிலையில் ஜெயிலர் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது அதன்படி பார்க்கையில்  ரஜினி கடைசியாக நடித்த ஒரு சில படங்கள் தோல்வி படங்களாக மாறியதால் தற்போது சம்பளத்தை குறைத்து உள்ளார்.

ஜெயிலர் படத்திற்காக அவர் 75 கோடி சம்பளம் வாங்கி உள்ளதாக பேசப்படுகிறது. மலையாள நடிகர் மோகன்லால் ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் நடித்துயுள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக அவருக்கு 8 கோடி சம்பளம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பல வருடங்களாக தெனிந்திய சினிமா உலகில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன் ஜெயிலர் படத்தில் நடிக்க சுமார் 80 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகை தமன்னா ஜெயிலர் படத்தில் காவலா பாடல் டிரண்ட் ஆகியது அதனைத் தொடர்ந்து படத்தில் அவருக்கு என்ன கதாபாத்திரம் என்பது தெரியவில்லை..

Jailer
Jailer

ஆனால் அவருக்கு சுமார் மூன்று கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் வசந்த ரவி ஜெயிலர் படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் அவருக்கு சம்பளம் சுமார் 20 லிருந்து 30 லட்சம் வரை வாங்கியிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

யோகி பாபு படத்தில் மிகப்பெரிய காமெடியனாக நடித்துள்ளார் அவருக்கு ஒரு கோடி சம்பளம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கன்னட டாப் ஹீரோ சிவ ராஜ்குமார் ஜெயிலர் படத்தில் எந்த மாதிரியான ரோலில் நடிக்கிறார் என்பது தெரியவில்லை ஆனால் இந்த படத்தில் நடிக்க அவர் சுமார் 4 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கிசுகிசுக்கபடுகிறது.