Jailer : தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கு மேலாக நடித்து ஓடிக் கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தர்பார் அண்ணாத்த போன்ற படங்கள் சுமாராக ஓடியதால் சூப்பர் ஸ்டார் பெருமளவு விமர்சிக்கப்பட்டார் இதிலிருந்து மீண்டு வர பல இளம் இயக்குனர்களுடன் கதை கேட்டு வந்தார்.
இளம் இயக்குனர் நெல்சன் சொன்ன கதை ரொம்ப பிடித்து போகவே ஜெயிலர் படம் அதிரடியாக உருவானது. படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவ ராஜ்குமார், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.
ஜெயிலர் படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் சிறப்பாக இருந்ததால் ரசிகர்களும் தாண்டி மக்களும் பெரிய அளவில் எதிர்பார்த்தனர். ஒரு வழியாக ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் 4000 திற்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது ஜெயிலர் படத்தில் ரஜினியின் எதார்த்தமான நடிப்பு, விநாயகத்தின் ரவுடிசம் போன்றவை ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் கைத்தட்டல் வாங்கியது.
இதனால் பட்டித் தொட்டி எங்கும் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது முதல் நாளில் மட்டுமே 90 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது. அடுத்தடுத்த நாட்களிலும் ஜெயிலர் படத்தின் வசூல் அதிகரித்தது. இந்த நிலையில் ஜெயிலர் படம் வெளியாகி 6 நாட்கள் முடிந்த நிலையில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது
அதன்படி பார்க்கையில் 6 நாட்கள் முடிவில் 395 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. வருகின்ற நாட்களில் ஜெயிலர் படத்தின் வசூல் அதிகரிப்பது நிச்சயம் எனக் கூறிய கமெண்ட் அடித்து இந்த செய்தியை பெரிய அளவில் ரஜினி ரசிகர்கள் பரப்பி வருகின்றனர்.