Jailer : தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது வயது முதிர்வின் காரணமாக வருடத்திற்கு ஒரு படத்தில் நடித்து வருகிறார் அந்த வகையில் அண்ணாத்த படத்தை தொடர்ந்து நெல்சன் உடன் கைகோர்த்து ஜெயிலர் படத்தில் நடித்தார்.
படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் சுமார் 4000 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது படத்தில் ரஜினியின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்து இழுத்தது மேலும் தமன்னாவின் காவலா பாடல், விநாயகத்தின் ரவுடிசம், யோகி பாபுவின் காமெடி, அனிருத்னி இசை போன்றவை அனைத்தும் பிரமாதமாக இருந்ததால்..
ரசிகர்களையும் தாண்டி குடும்ப அடியன்ஸ் மத்தியில் ஜெயிலர் படத்தை கொண்டாடினார். மேலும் நல்ல விமர்சனங்களை கொடுத்து வருவதால் ஜெயிலர் பட்டி தொட்டி எங்கும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. முதல் நாளே 90 கோடிக்கு மேல் வசூலித்ததால் அடுத்தடுத்து நாட்களிலும் ஜெயிலர் படத்தின் வசூல் அதிகரித்தது.
இந்த நிலையில் 5 நாட்கள் முடிவில் ஜெயிலர் படம் அள்ளிய மொத்த கலெக்ஷன் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது உலக அளவில் சுமார் 340 கோடிக்கு மேல் அள்ளி வசூல் சாதனை செய்துள்ளது. இதன் மூலம் பல்வேறு டாப் நடிகர்களின் வசூல் சாதனையையும் முறியடித்துள்ளது.
வருகின்ற நாட்களிலும் ஜெயிலர் படத்தின் வசூல் மிகப்பெரிய ஒரு உச்சத்தை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது இதனால் ரஜினியும் சரி, படக்குழுவும் சரி செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர். இயக்குனர் நெல்சன் தொடர்ந்து பல போட்டிகளில் ஜெயிலர் படம் குறித்தும் தனது சந்தோஷத்தை பகிர்ந்து வருகிறார்.