சமீபத்தில் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெய் பீம் திரைப்படம் இணையத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் மக்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில் இந்த திரைப்படத்தை ஒரு வகையினர் கொண்டாடினாலும் ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் சூர்யா குறித்து இயக்குனர் குறித்தும் கடுமையான விமர்சனங்கள் சமூக வலைதள பக்கத்தில் வந்தாலும் சூர்யாவிற்கு ஆதரவாக சிலர் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தின் எழுத்தாளர் கண்மணி குணசேகரன் அவர்கள் தான் பெற்ற சம்பளத்தை முழுவதையும் திருப்பி கொடுத்துள்ளார்.
இவ்வாறு அவர் பணத்தை திருப்பிக் கொடுத்தது மட்டும் இல்லாமல் ஒரு பதிவினையும் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தவகையில் அவர் கூறியது என்னவென்றால் வஞ்சகரின் காசை வாங்கி தான் இந்த உடம்பு வாழணுமா..? என்று கேள்வி எழுப்பியது மட்டுமில்லாமல் இந்த உன் பணம். எலி வேட்டையிலிருந்து ஜெய் பீம்
இவ்வாறு இந்த திரைப்படமானது நாவல் வாசிப்பின் மூலம் தொடங்கிய திரைப்படமாகும் அந்தவகையில் மெல்லமெல்ல சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் பற்றி கூறப்பட்டிருந்த நிலையில் இருளர்களின் வாழ்வியலோடு கூடிய எலி வேட்டை சாந்த காட்சிகளாகவே அமைக்கப்பட்டிருந்தது.
ஆனால் குறிப்பிட்ட பெயர் மற்றும் காட்சிகள் ஆகியவற்றைப் பற்றி நான் சரியாக கவனிக்கவில்லை. ஆனால் அந்த பெயர்களையும் காட்சிகளையும் நான் சரி செய்து கொள்கிறேன் என உறுதி அளித்தார்கள் ஆனால் தற்போது முழுவதும் ஏமாற்றிவிட்டு என் சமூகத்தினருக்கு துரோகம் செய்த இவர்களின் காசை வைத்து என் உடம்பு வாழனுமா என இந்த திரைப்பட எழுத்தாளர் அவர்களின் பணத்தை திருப்பி அனுப்பிவிட்டார்.