வெறி கொண்ட மிருகமாக மாறிய ஜெய்.! வைரலாகும் சிவசிவா படத்தின் மோஷன் போஸ்டர்.!

siva sivaa
siva sivaa

நடிகர் ஜெய் தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் ஜெய் இவர் முதன்முதலில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாக்கிய சென்னை 600028 திரைப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். அதன் பிறகு சசிகுமார் இயக்கத்தில் வெளியாகிய சுப்பிரமணியம் திரைப்படத்தில் நடித்து இளம் நடிகராக வலம்வந்தார்.

மேலும்சங்கரர் துணை இயக்குனராக பணியாற்றிய அட்லி இயக்கத்தில் ராஜா ராணி திரைப்படத்தில் இரண்டாம் கட்ட கதாநாயகனாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதன் பிறகு இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளால் கிடைத்தது. ஒரு காலகட்டத்தில் நடிகை அஞ்சலி ஜெய் காதலித்ததாக கூறப்படுகிறது. இருவரும் ஆனால் இதுவரை ஒப்புக் கொள்ளவில்லை. பின்பு  இருவரும்  பிரிந்து விட்டார்கள். அஞ்சலி தொடர்ந்து சினிமாவில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

அதே போல் ஜெய் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். ஜெய் தற்பொழுது பிரேக்கிங் நியூஸ், எண்ணித்துணிக, குற்றமே குற்றம்,  சுந்தர் சி தயாரிப்பில் ஒரு திரைப்படம் என பல திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார். அதேபோல் சுசீந்தரன் இயக்கத்தில் ஜெய் கதாநாயகனாக ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்திற்கு சிவசிவா என பெயர் வைத்துள்ளார்கள். மேலும் இந்த திரைப்படம் அதிரடி ஆக்ஷன் கலந்து திரைப் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது அந்த போஸ்டரில் ஜெய் அரிவாளுடன் ரத்தம் சொட்ட சொட்ட எதிரே முன் நிற்கிறார். இந்தப் போஸ்டர் இணையதளத்தில் வைரலாக வருகிறது.

தற்போது இந்த சிவசிவா திரைப்படத்தில் நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார் மேலும் பாலா சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு நடிகர் ஜெய் அவர்கலே இசை அமைத்துள்ளார் அதனால் இந்த திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் நடிகர் ஜெய்.

இதோ மோஷன் போஸ்டர்