இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்..? ஜெய் பீம் திரைப்படம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் விமர்சனம்..!

lakshmi-ramakirushnan-1

சமீபத்தில் நடிகர் சூர்யா ஞானவேல் இயக்கத்தில் ஜெய் பீம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் ஒரு தரப்பு மக்களை மட்டும் கவரவில்லை அதற்கு முக்கிய காரணம் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிதான்.

எனேனில் இந்த திரைப்படத்தில் வன்னிய சமுதாயத்தை இழிவுபடுத்தி காட்டி உள்ளதாக பிரபல வன்னியர் சங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள் அந்த வகையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற வில்லனின் பெயர் வன்னியர் சங்கத் தலைவரின் பெயர் வைக்கப்பட்டு இருந்தது மட்டுமில்லாமல் அவருடைய வீட்டில் அக்னி கலசம் காலண்டர் அமைக்கப்பட்டிருந்தது.

எனவே இந்த சர்ச்சைக்கு ஆரம்ப புள்ளியாக வைத்த நிலையில் இந்த திரைப்படத்தில் இருந்து அந்த காட்சி உடனடியாக நீக்கப்பட்டு அதன் பிறகு மீண்டும் திரையிடப்பட்டது சூர்யா தான் செய்தது குற்றம் என்று இதுவரை யாரிடமும் மன்னிப்பு கேட்கும்படி இல்லை.

இதனால் வன்னிய சமுதாயத்தினர் பலர் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மட்டுமில்லாமல் சூர்யாவை தண்டித்தால் அவர்களுக்கு ஆஃபர் மே ஆஃபர் பரிசு வழங்கப்படும் என வன்னியர் சங்க உறுப்பினர்கள் கூறி உள்ளார்கள்.

இந்நிலையில் எப்பொழுதும் சர்ச்சைக்கு எதிர் குரல் கொடுக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது ஜெய் பீம் திரைப்படத்தை பற்றி பேசியுள்ளார். அதாவது இந்த உண்மை சம்பவ கதையில் பல்வேறு நல்ல விஷயங்கள் இருக்கிறது அதை எல்லாம் சரியாக காட்டாமல் நீங்கள் ஜாதியை தவறாக சித்தரித்தது மிகவும் தவறான செயலாகும்.

இவ்வாறு ஒரு தரப்பினரை பற்றி மட்டும் எப்படி காட்டும்போது அது பலரையும் கோபத்துக்கு உள்ளாக்குவது மட்டுமில்லாமல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் கதைக்காக இப்படி ஒரு செயலை செய்தது மிகவும் வியக்கத்தக்க விஷயமாக இருப்பது மட்டுமில்லாமல் இது ஏற்றுகொள்ளும்படி கிடையாது என லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.