விஜய் தனுஷ் என முன்னணி நடிகர்களின் திரைப்படத்தையே அடித்து நொறுக்கிய சூர்யாவின் ஜெய்பீம்.! டாப் 10 லிஸ்டில் எத்தனையாவது இடம் தெரியுமா.!

jai beem

பொதுவாக ஒரு திரைப்படம் திரைக்கு வருகிறது என்றால் அந்தக் திரைப்படத்திற்கு எவ்வளவு மதிப்பீடு என பலரும் ரிவ்யூ செய்து விடுவார்கள் அந்த வகையில் உலக அளவில் படங்களை தர மதிப்பீடு செய்து படங்களை பட்டியலிட்டு வருகிறது IMDB இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் வெளியான திரைப்படங்களில் டாப் 10 இடங்களைப் பிடித்த திரைப்படங்களை தற்பொழுது வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் தமிழில் எந்த திரைப்படம் டாப் 10 இடத்தில் இடம் பெற்றுள்ளது என்பதை இங்கே காணலாம் இதில் ரசிகர்கள் பலரும் ஆச்சரியப்படும் அளவிற்கு முதலிடத்தில் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது. அதேபோல் இரண்டாவது இடத்தில் ஷெர்ஷா என்ற திரைப்படம் இடம்பெற்றுள்ளது.

அதேபோல் மூன்றாவது இடத்தில் சூரியவன்ஷி என்ற திரைப்படமும் நான்காவது இடத்தில் மாஸ்டர் திரைப்படமும், ஐந்தாவது இடத்தில் சர்தார் உத்தம் என்ற திரைப்படமும் ஆறாவது இடத்தில் மிமி என்ற திரைப்படமும் ஏழாவது இடத்தில் கர்ணன் திரைப்படமும் எட்டாவது இடத்தில் சித்தத் என்ற திரைப்படமும் ஒன்பதாமிடத்தில் திரிஷ்யம் 10வது இடத்தில் ஹஸீன் தில்ருபா ஆகிய திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளது.

இந்த டாப் 10 பட்டியலில் தமிழில் மூன்று திரைப்படங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது இதில் முன்னணி நடிகர்களான திரைப்படங்களான மாஸ்டர் மற்றும் கர்ணன் திரைப்படத்தை ஓரம் தள்ளிவிட்டு சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருந்தாலும் ஜெய்பீம் திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அதே அளவிற்கு சர்ச்சைகளையும் இந்த திரைப்படம் சந்தித்தது இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சிதான் மிகப் பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. அந்த காட்சிக்கு பாமகவினர் மற்றும் வன்னியர் சங்க அமைப்புகள் அனைத்தும் வரிசை கட்டிக் கொண்டு வந்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் ஜெய்பீம் திரைப்படத்திற்கு விருதுகள் எதுவும் தரக்கூடாது எனவும் மத்திய மாநில அரசுக்கு வன்னியர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் ஜெய் பீம் திரைப்படம் உலக அளவில் ரசிகர்களை ஈர்த்துள்ளதுமேலும் கோல்டன் க்ளோப் என்ற சர்வதேச விருதுக்கு ஜெய் பீம் திரைப்படம் தேர்வு செய்த நிலையில். IMDb இணையதளத்தில் இந்தியாவிலேயே முதல் இடத்தை பிடித்துள்ளது இந்த ஜெய் பீம் திரைப்படம். அதேபோல் 1994ஆம் ஆண்டிலிருந்து உலக பட்டியலில் முதலிடத்தில் இருந்து ஹாலிவுட் திரைப்படத்தை ஜெய் பீம் திரைப்படம் பின்னுக்குத்தள்ளி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.