இதுவரையிலும் சினிமாவில் முன்னணி நடிகர்கள் நடிக்கும் எந்தப் படமும் ஒடிடி வழியாக வெளியாகாது. ஆனால் கொரோனா பிரச்சனையின் காரணமாக பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளின் படங்கள் ஒட்டி வழியாகத்தான் ரிலீசானது.
அந்த வகையில் முதன் முதலில் OTT வழியாக ரிலீசான திரைப்படம் சூர்யா நடித்தது சூரரைப்போற்று தான். இப்படம் ஓடிடி-யில் ரிலீஸ் ஆனதால் பல பிரச்சனைகளை சூர்யா சந்தித்தார் பிறகு காலப்போக்கில் எல்லாம் மாறிவிட்டது.
இத்திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் பொங்கலை முன்னிட்டு வெளியானது. பிறகு 15 நாட்கள் கழித்து அமேசான் தளத்தின் வழியாக வெளியானது இதற்கும் பல சர்ச்சைகள் எழும்பியது.
இந்நிலையில் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ஜகமே தந்திரம் திரைப்படம் OTT வழியாக ரிலீசானது. இப்படம் தியேட்டரில் ரிலீஸ் செய்யலாம் என்று தனுஷ் விரும்பினார். ஆனால் ஜகமே தந்திரம் தயாரிப்பாளர் நெட்ப்ளிக்ஸ் OTT தளத்தில் நல்ல லாபம் பெறலாம் என்று நினைத்து இப்படத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு தந்துவிட்டார்.
அந்தவகையில் ஜகமே தந்திரம் திரைப்படம் 55 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இப்படம் 190 நாடுகளுக்கு மேல் வெளியாக உள்ளதாம். இந்நிலையில் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரைப்போற்று திரைப்படத்தை விட தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஜகமே தந்திரம் திரைப்படம் 13 கோடி அதிகமான விலைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள்.
அதோடு விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் அமேசான் இணையதளத்தில் வெளியிட 36 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரைப்போற்று திரைப்படம் 42 கோடிக்கு விற்கப்பட்டது இதில் விஜய் மற்றும் சூர்யாவை விட தற்போது தனுஷ் தான் டாப்பில் உள்ளவர்.