தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் தனுஷ் கர்ணன் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனுஷின் ஜகமே தந்திரம் படம் ஜூலை 18-ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதுவரை இந்த ட்ரைலரை சுமார்6 மில்லியன்னுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
கார்த்திக் சுப்புராஜும், தனுஷும் இணைந்து பணியாற்றி உள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் தற்போது தாறுமாறாக ஏறி உள்ளது இந்த படம் வருகின்ற ஜூலை 18-ஆம் தேதி நெட்ஃபிக்ஸ் OTT தளத்தில் வெளியாக உள்ளது.
நடிகர் தனுஷ் தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்தின் அப்டேடையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம் ஆனால் இதுவரை ஜகமே தந்திரம் படம் குறித்து எந்த ஒரு அப்டேட் செய்யும் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடாமல் இருந்து வருகிறார் தனுஷ் அதற்கு காரணம் தயாரிப்பாளர் மீது செம கடுப்பில் இருப்பது தான் காரணம்.
தனுஷ் இந்த படம் எப்படிப்பட்ட சூழ்நிலை இந்தாலும் அதையெல்லாம் தாண்டி எப்படியாவது திரையரங்கில் கொண்டு சேர்த்து விட வேண்டும் என தனுஷ் ஒற்றைக் காலில் நின்றார். ஆனால் தயாரிப்பாளரோ அதற்குள் OTT தளத்திற்கு மாற்றியதால் அவர் மீது செம கடுப்பில் இருப்பதோடு எந்த ஒரு தடையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிராமல் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் நாசுக்காக சமூக வலைதளப் பக்கத்தில் தனுஷ் கூறிய செய்தி தற்போது வேகம் எடுத்துள்ளது. அதாவது இந்த திரைப்படம் நான் எதிர்பார்த்த மாதிரி திரையரங்கில் வராமல் OTT தளத்திற்கு மாறி உள்ளது.
ஜகமே தந்திரம் படம் தியேட்டரில் கொண்டாட வேண்டிய படம் திரையரங்கில் பார்த்தால் தான் இந்த படத்தின் உண்மை தன்மையை தெரியும் ஆனால் தற்பொழுது இந்த படம் OTT தளத்திற்கு மாறிவிட்டது. இந்த படத்தை போன் அல்லது டிவியில் பார்த்தால் சூப்பராக இருக்கும் என நாசுக்காக சொல்லி உள்ளார் தனுஷ்.