ப்ளீஸ் சார் ஜகமே தந்திரம் அடுத்த பாகத்தை எடுங்க..! கார்த்திக் சுப்புராஜிடம் நச்சரிக்கும் தனுஷ்..!

jagame thanthiram
jagame thanthiram

jagame thathiram second part latest update: தமிழ் திரை உலகில் ஆரம்பத்தில் இவர் எல்லாம் ஒரு நடிகரா என ரசிகர்களால் வெறுக்கப்பட்ட நடிகர்தான் நடிகர் தனுஷ். ஆனால் தற்போது இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவருடைய விடாமுயற்சி தான் காரணம்.

ஆரம்பத்தில் இவரெல்லாம் ஒரு ஹீரோவா என கைதட்டி சிரித்த பலரும் இவரை வைத்து திரைப்படம் இயக்க  சான்ஸ் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்  அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே மாபெரும் ஹிட் கொடுப்பது மட்டுமல்லாமல் வசூலிலும் வெளுத்து வாங்கி வருகிறது.

இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் ஜகமே தந்திரம் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படமானது வருகின்ற ஜூன் 18-ஆம் தேதி இணையத்தில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது தொடர்ந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பும் இந்த திரைப்படத்தில் அதிகரித்துவிட்டது.

ஏனெனில் இதுவரை தனுஷ் நடித்த படங்களை விட இந்த திரைப்படத்தில் தனுஷின் கதாபாத்திரம் ஆனது மிகவும் சிறப்பாக இருக்கும் என என்ற திரைப்படத்தின் இயக்குனர் சமீபத்தில் தெரிவித்திருந்தார் மேலும் இவருக்கு கொடுத்த கதாபாத்திரம் ஆனது தனுஷிற்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார். இந்த திரைப்படத்தில் சுருளி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் தனுஷ்  இந்த கதாபாத்திரத்தை மிகவும் ரசித்து நடித்ததாகவும் இவர் இந்த திரைப்படத்தில் செய்யும் ஒவ்வொரு  செயலும் ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும் என கூறப்படுகிறது.

இவ்வாறு இந்த திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே நடிகர் தனுஷ் கார்த்திக் சுப்புராஜிடம் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க வேண்டும் என வற்புறுத்தி வருகிறாராம். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் ஜார்ஜ் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் எஸ் ஜே சூர்யாவிடம் தான்  கேட்டுள்ளார்கலாம் ஆனால் எஸ் ஜே சூர்யா கால்ஷீட் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது.

மேலும் இந்த திரைப்படமானது சுமார் 17 மொழிகளில் வெளிவர போவதாகவும் மற்ற மொழிகளுக்கு ஏற்றவாறு சில காட்சிகளை வைக்கப்பட்டதாகவும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

jagame thanthiram
jagame thanthiram