இந்தப்படம் பாக்குறதுக்கு பரோட்டா வாங்கி சாப்பிட்டு தூங்கலாம்..! ஜகமே தந்திரம் திரைப்படத்தை கழுவி ஊற்றிய ப்ளு சட்டை மாறன்..!

jagame-thathiram
jagame-thathiram

jagame thathiram movie review: பொதுவாக திரை உலகில் வெளிவரும் ஒவ்வொரு திரைப்படத்தையும் கிண்டல் செய்யவும் கேலி செய்யவும் ஏகப்பட்ட  நெட்டிசன்கள் சமூகவலைதளத்தில் உலாவிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளி வந்தாலே போதும் ரசிகர்களின் கிண்டலுக்கு பஞ்சமே இருக்காது அதுவே முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் போன்றவர்களின் திரைப்படம் வெளி வந்தாலே போதும் சொல்லவே தேவையில்லை.

இவ்வாறு திரைப்படங்களை விமர்சனம் செய்து பிரபலமானவர் தான் ப்ளூ சட்டை மாறன் இவர் கிட்டத்தட்ட 9 லட்சத்திற்கும் மேலாக தன்னுடைய யூடியூப் சேனலில் சப்ஸ்கிரைப் வைத்துள்ளார் அதுமட்டுமல்லாமல் இவர் கூறும் விமர்சனங்கள் மூலமாக திரைப்படத்தின் வசூல் பாதிக்கப் படுகிறது என பல்வேறு இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் பயந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தை தாறுமாறாக விமர்சித்துள்ளார். ஜகமே தந்திரம் திரைப்படத்தில்  லண்டனில் புகழ்பெற்ற தொழிலாளர்கள் மற்றும் அகதிகளை அந்த நாட்டில் இருந்து விரட்ட ஒரு பெரிய கேங்க்ஸ்டர் கும்பல் செயல்பட்டு வரும்.

இவ்வாறு அவர்களுக்கு எதிராக ஈழத்தமிழர்களும் அந்நாட்டின் மக்கள்களும் போராடுவார்கள் அதற்காக அவர்களுக்கு ஒரு ரவுடி வேண்டும் என்ற காரணத்தினால் மதுரையில் பரோட்டா கடையில் வேலை செய்யும் தனுஷை கூட்டிச்சென்று லண்டனில் மிக பெரிய ரவுடியாக கண்பிப்பார்கள்.

பொதுவாக கார்த்திக் சுப்பராஜ் திரைப்படம் என்றாலே அது கேங்ஸ்டர் திரைப்படமாக தான் இருக்கும் அந்த வகையில் தற்போது இன வெறியையும் அரசியலையும் இந்த திரைப்படத்தில் புகுத்தி பல்வேறு பிரச்சனைகளை இந்த திரைப்படத்தின் மூலமாக காட்டி உள்ளார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தின் விமர்சனத்தை கூறுவதாக ப்ளூ சட்டை மாறன் ஜகமே தந்திரம் திரைப்படத்தின் கதையை கிழி கிழி என்று கிழித்து தொங்க விட்டுள்ளார்.