இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ரஜினியின் பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனுஷின் ஜகமே தந்திரம் திரை படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜெயம் காஸ்மோ நடித்துள்ளார்கள்.
இந்த திரைப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்துள்ளார் படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது, மேலும் ஜகமே தந்திரம் திரைப்படம் ஒரு அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது இந்த திரைப்படம் லண்டனில் தொடங்கி படப்பிடிப்பு தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது.
கடந்த பிப்ரவரி மாதமே இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது, அதேபோல் படக்குழு மோஷன் போஸ்டரை வெளியிட்டு வந்தது, அந்த மோஷன் போஸ்டரில் மே மாதம் 1ஆம் தேதி ஜகமே தந்திரம் திரைப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸை தள்ளிப் போய்க் கொண்டே போகிறது.
இந்த நிலையில் தனுஷின் பிறந்தநாள் இந்த மாதத்தில் வருகிறது ஜூலை 28ஆம் தேதி தனுஷின் பிறந்தநாள், அன்று ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் இருந்து ரகிட என்ற பாடல் வெளியாகும் என புதிய போஸ்டர் உடன் பட குழு வெளியிட்டுள்ளது இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
First Single From July 28 ! #Rakitaரகிடరకిట #JagameThandhiram #JagameTantram #JT #DhanushBdayMonthBegins@dhanushkraja @karthiksubbaraj @sash041075@Music_Santhosh @chakdyn @RelianceEnt @APIfilms@tridentartsoffl @GA2Official @UV_Creations @onlynikil @IamEluruSreenu pic.twitter.com/XXXxwI8wOb
— Y Not Studios (@StudiosYNot) July 1, 2020