இணையதளத்தில் லீக் ஆனது தனுஷின் ஜகமே தந்திரம் கதை.? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தகவல்..

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் எஸ் சசிகாந்த் சக்கரவர்த்தி ராமச்சந்திரா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த திரைப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார் அதுமட்டுமில்லாமல் ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோயினாக நடித்துள்ளார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்துள்ளார்.

மேலும் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ வில்லனாக நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் சஞ்சன நடராஜன், கலையரசன், ஜர்ஜ் அஸ்வந்த், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஜகமே தந்திரம்  திரைப்படம் OTT யில் வெளியாகும் என வதந்திகள் வெளியானது ஆனால் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படக்குழு மற்றும் தயாரிப்பு நிறுவனம் இந்த திரைப்படம் திரையில் தான் வரும் என உறுதி அளித்தது.

இந்த நிலையில் படத்தில் நடித்துள்ள ஜேம்ஸ் காஸ்மோ சமீபத்தில் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார், அதன் மூலம் படத்தின் கதை என்ன என்பது வைரலாகி வருகிறது, லண்டனில் மாபியா கும்பலின் தலைவராக இருக்கிறார் ஜேம்ஸ். இவரின் ஆளுகளுக்கு ஒரு புதிய கும்பல் ஒன்று தொந்தரவு செய்து வருகிறது.

இந்த கும்பலில் உள்ளவர்கள் இந்தியாவை சேர்ந்த சிலரே இருப்பதால் ஜேம்ஸ் இவர்களை அடக்குவதற்காக இந்தியாவிலிருந்து தனுசை வரவழைக்கிறார், அங்கு சென்ற தனுஷ் உண்மை நிலவரத்தை தெரிந்து கொண்டு வில்லனாக இருந்த தனுஷ் ஹீரோவாக மாறுகிறார், பிறகு அனைத்து வில்லன்களையும் அடித்து ஒழித்து கட்டுகிறார் இதுதான் கதை.

படத்தில் தனுஷ் இரட்டை வேடமா அல்லது இரண்டு கெட்டப் ஆக இருக்குமா என்பதை ட்ரைலர் அல்லது டீசர் ஏதாவது வெளியிட்டால் தான் கண்டுபிடிக்க முடியும் தற்பொழுது வரை இந்த திரைப்படம் ஒரு கேங்க்ஸ்டர் திரைப்படம் என்பதை மட்டுமே நாம் யூகிக்க முடியும். எனவே டீசர் ட்ரெய்லர் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Comment