சினிமா உலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்து வந்த கார்த்திக் சுப்புராஜ் தற்போது தனுஷுடன் இணைந்து ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தையும் எடுத்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 18-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் வெளிவந்து பட்டையை கிளப்பிய நிலையில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
படக்குழு தற்போது பிரமோஷன் வேலைகளை சீரும் சிறப்புமாக செய்து கொண்டிருக்கின்றது இந்த நிலையில் முக்கிய மீடியா நிறுவனங்களுக்கு படக்குழு பேட்டி கொடுத்து வருகிறது. படத்தில் நடந்த பல விஷயங்களை தயாரிப்பாளரும், இயக்குனரும் பகிர்ந்து வருகின்றனர் அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ் தற்போது ஒரு புதிய விஷயத்தை கூறியுள்ளார்.
இந்த படத்தில் மலையாள நடிகர் ஜியோ ஜார்ஜ் ரோலில் முதலில் இயக்குனரும், நடிகருமான எஸ் ஜே சூர்யா தான் நடிகை இருந்தார் ஆனால் எஸ் ஜே சூர்யா ஹீரோவாகவும் வில்லனாகவும் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருவதால் அவரது கால்ஷீட் கிடைக்காமல் போனது. அதன் பிறகே ஜியோ ஜார்ஜ் அந்த ரோலில் நடித்தார்.
எஸ் ஜே சூர்யா நடித்திருந்தால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது இரண்டு மடங்காக ஏறி இருக்கும் ஆனால் அது நடைபெறவில்லை. இது ரசிகர்களுக்கு சற்று வருத்தமான செய்தியாக மாறியது. மேலும் எஸ் ஜே சூர்யா தற்போது திரையுலகில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து உள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் அதற்கு வெற்றி பிள்ளையார் சுழி போட்டது என்னமோ கார்த்திக் சுப்புராஜ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இறைவி திரைப்படத்தில் எஸ். ஜே. சூர்யாவை நடிக்க கமீட் செய்தார் அதில் அவரது நடிப்பு அபாரமாக இருந்தது அதன் பிறகு சினிமா உலகில் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.