குறிப்பிட்ட சில வினாடிகளிலேயே ஏகத்திற்கு லைக்குகளை பெற்ற ஜகமே தந்திரம் மேக்கிங் வீடியோ..!

jagame-thanthiram
jagame-thanthiram

jagame thanthiram making video: பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடுத்துள்ள திரைப்படம் தான் ஜகமே தந்திரம் இவ்வாறு இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் சுருளி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகும் இந்த திரைப்படமானது y not ஸ்டூடியோஸ் தயாரித்து வருகிறது.

இத்திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் ஜார்ஜ் என்பவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடுத்து வருவது மட்டுமல்லாமல் தற்சமயம் இந்த திரைப்படமானது நேற்று உலகமெங்கும் 17 மொழிகளில் ரிலீசாகி உள்ளது. இவ்வாறு தியேட்டரில் விசில் சத்தம் முழங்க இந்த திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாட நினைத்த நிலையில் இணையத்தில் வெளியாகிவிட்டன.

சமீபத்தில் தான் இந்த திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர்  பாடல்கள் என அனைத்தும் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பையும் எகிற வைத்து விட்டது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக பாடல் வெளியீட்டு விழா குறித்து ட்வீட் வெளியிட  நமது நடிகர் தனுஷ் மீண்டும் ஜகமே தந்திரம் இரண்டாம் பாகம் உருவாகினால் அந்த திரைப்படத்தில் சுருளி கதாபாத்திரத்தில் நான் நடிப்பேன் என அவர் கூறியிருந்தார்.

இவ்வாறு தனுஷ் கூறியதன் காரணமாக இந்த கதாபாத்திரம் மிக சுவாரஸ்யமாக இருப்பது மட்டுமல்லாமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் தூண்டிவிட்டது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று யூடியூபில் வெளியாகி உள்ளது.

இவ்வாறு வெளிவந்த வீடியோ ஆனது குறிப்பிட்ட சில வினாடிகளில் ஏகத்திற்கு லைக்குகளை வாங்கி குவித்து விட்டது.