சிம்புவிற்கு அடிக்கும் ஜாக்பாட்.! காரணம் இதுதானா..

simbu
simbu

குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமாகி மாஸ் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் சிம்பு. முன்னணி நடிகராக ஒரு காலகட்டத்தில் கலக்கி வந்த இவர் வயது கோளாறு காரணமாக இவர் செய்த சின்னச்சின்ன தவறுகளினால் தனக்கென இருந்த நல்ல பெயரை மொத்தமாக இழந்தார்.

இவரால் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க முடியாமல் போய் இருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் இவருக்கு என இருந்த மவுசு குறையாமல் இருந்தது. அந்த வகையில் சிம்புவிற்கு எந்த பிரச்சினை வந்தாலும் அவரின் ரசிகர்கள் குரல் கொடுத்து வந்தார்கள். இதன்மூலம் எல்லா பிரச்சனைகளிலும் இருந்து வெளிவந்த இவர் சிறிது காலம் கழித்து மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். சினிமாவிற்கு மீண்டும் வந்தபொழுது பல பிரபலங்கள் இவரால் முன்புபோல் பிரபலமடைய முடியாது எனக் கூறி வந்தார்கள்.

ஆனால் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாநாடு திரைப்படத்தின் மூலம் தனது அசத்தலான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருந்தார். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வெந்து தனிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தில் இவர் நடித்ததன் மூலம் சமீபத்தில் இவருக்கு டாக்டர் பட்டம் கிடைத்தது. இதன் மூலம் மகிழ்ச்சியில் இருந்து வந்த சிம்பு அனைத்து பேட்டிகளிலும் இதற்கெல்லாம் என்னுடைய அப்பா மற்றும் அம்மா தான் காரணம் என்று கூறி வருகிறார்.

அதோடு என்னுடைய இந்த வளர்ச்சிக்கு என் அம்மா வாங்கி தந்த கார் தான் காரணம் என்றும் கூறிவருகிறார். அதாவது இவரின் பிறந்தநாள் அன்று  இவரின் அம்மா உயர்ரக மினி கூப்பர் கார் பரிசாக அளித்துள்ளார். அதன் பிறகு சிம்பு எங்கு சென்றாலும் அந்த காரை தானே எடுத்துச் செல்வாராம்.

அந்தக் கார் வந்த பிறகுதான் எனக்கு மாநாடு திரைப்படத்தில் வெற்றி கிடைத்ததாகவும் தற்போது கூட 20 கோடியாக சம்பளம் உயர்ந்துள்ளதாகவும் அவரின் நெருங்கிய வட்டாரங்களில் கூறி வருகிறாராம். எனவே அந்த காரின் மீது சிம்பு அதிகளவு பாசம் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்பொழுது சிம்பு நடித்து வரும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் விரைவில் வெளியாகும் என்று அவருடைய ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள்.