சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் தான் அண்ணாத்த இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து விட்டதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த திரைப்படத்தில் நயன்தாரா,மீனா,குஷ்பபூ,கீர்த்தி சுரேஷ் போன்ற பலரும் நடித்திருப்பார்கள் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வெளியான இந்த திரைப்படம் கிராமத்து கதை களம் கொண்ட திரைப்படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் பார்த்தால் இந்த திரைப்படம் வெளியானபோது தமிழ்நாட்டில் மட்டுமே சுமார் 90 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது மேலும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்தது என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை தமிழகத்தில் ஓன் ரிலீஸ் செய்தார்கள்.
மேலும் அண்ணாத்த படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு அதிகமான லாபம் கிடைத்ததாக ஒரு தகவல் தற்போது கிடைத்துள்ளது அதாவது தமிழகத்தில் 90 கோடிக்கு மேல் வசூல் செய்த அண்ணாத்த படத்திலிருந்து 75% ஷேர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளதாக பிரபல பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் பேட்டியில் கூறியதாக இந்த தகவல் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் பார்த்தால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட 66 கோடி வரை ஷேர் கிடைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் பரவாயில்லையே சன் பிக்சர்ஸ் நிறுவனம் முன்னேறிக் கொண்டே போகிறார்கள் என்று கூறி வருகிறார்கள்.