Jackie Shroff salary : ரஜினி நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிய திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் தமன்னா, ஜாக்கி ஷெராப், விநாயகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு சிவராஜ்குமார், மோகன்லால் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். இரண்டு வருடங்களுக்குப் பிறகு ரஜினியை திரையில் காண்பதால் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு சென்றார்கள்.
அதேபோல் படமும் அட்டகாசமாக இருப்பதால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போகிறது இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் முதல் நாள் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது முதல் நாளே ஜெயிலர் திரைப்படம் 49 கோடி இந்தியாவில் வசூல் செய்திருந்தது அதேபோல் உலகம் முழுவதும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனையை படைத்தது. அப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது உலகம் முழுவதும் 375 கோடி வரை வசூலித்திருப்பதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள் ஏனென்றால் விரைவில் 500 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்து விடும் என மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். ஜெயிலர் திரைப்படத்தில் பணியாற்றிய பான் இந்தியா மெகா ஸ்டார் களான மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராப் ஆகியவர்கள் நடித்திருந்தார்கள் அதேபோல் அனைவரையும் ஸ்கிரீனில் அழகாக காட்டி இருந்தார் நெல்சன் திலிப் குமார்.
அதிலும் ஜெயிலர் திரைப்படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார் விநாயகன் இவரின் நடிப்பை பார்த்து பல ரசிகர்கள் மெய்சிலிர்த்து போனார்கள் ஏனென்றால் அந்த அளவு ஹீரோவுக்கு நிகரான வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார். படத்தில் அனைவரையும் சரியாக பயன்படுத்திய நெல்சன் திலிப் குமார் ஜாக்கி ஷெஃராப் அவர்களுக்கு மட்டும் பெரிதாக காட்சிகளே இல்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய செய்தியாக இருக்கிறது.
சிவராஜ்குமார் மோகன்லால் இருவருக்கும் மிகப்பெரிய காட்சியை கொடுத்துவிட்டு ஜாக்கி ஷெராப் அவருக்கு மட்டும் ஜேசிபி ஆபரேட்டராக காட்டிவிட்டார் இந்திய அளவில் மிகப்பெரிய நடிகராக இருக்கும் இவரை இவ்வாறு காட்டியது ரசிகர்களுக்கு வருத்தம் தான் இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தில் ஜாக்கி ஷெராப் நடித்ததற்காக எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்பது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.
ஜாக்கி ஷெராப் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்ததற்காக மூன்றில் இருந்து நான்கு கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.