தஞ்சாவூரை பூர்வீகமாக கொண்டவர் ஐக்கி பெர்ரி இவர் இந்தியன் ராப்பர், சிங்கர் பாடலாசிரியர், நடிகை என பல முகங்களைக் கொண்டவர். சினிமாவில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்துள்ளார். ஐக்கி பெர்ரி கிளினிக் வைத்துள்ளார் கோடம்பாக்கத்தில்.
இந்த நிலையில் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் பீஸ்ட். இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. மேலும் பீஸ்ட் திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார்.
கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு பீஸ்ட் திரைப்படத்திலிருந்து அரபிக்குத்து பாடலை படக்குழு ரிலீஸ் செய்தது. இந்த பாடல் வெளியாகி பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆகி வைரலானது அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் பிரபலங்கள் என அனைவரும் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள்.
அந்தவகையில் மணிமேகலை, யாஷிகா ஆனந்த், சிவாங்கி, குக் வித் கோமாளி பிரபலங்கள், மாளவிகா மோகனன், பூஜா ஹெக்டே, என பலரும் அரபி குத்துப்பாடலுக்கு வீடியோவை வெளியிட்டு வந்தார்கள். சமீபத்தில்கூட நடிகை வேதிகா அரபிக் குத்துப்பாடலுக்கு நடனமாடிய வீடியோவை பதிவு செய்து இருந்தார்.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலமடைந்தவர் ஐக்கி பெர்ரி இவர் தற்பொழுது அரபி குத்து பாடலுக்கு நடனமாடி தன்னுடைய சமூக வலைத்தளமான இன்ஸ்டகிரம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.