தளபதி விஜய் தனது 66வது படத்தில் தற்போது தீவிரமாக நடித்து வருகிறார் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வருகின்ற நிலையில் தில் ராஜு தயாரித்து வருகிறார். படத்தை அடுத்தாண்டு முதலிலேயே வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதால் படப்பிடிப்பு..
சென்னை ஹைதராபாத் ஆகிய இடங்களில் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று விஜயின் பிறந்த நாளையொட்டி விஜய்யின் 66வது படத்தின் மூன்று போஸ்டர்கள் மற்றும் படத்தின் டைட்டில் வாரிசு எனவும் வெளியாகியுள்ளது. இந்த செய்தி நேற்று விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது.
வாரிசு படத்தில் விஜய் நீண்ட வருடங்களுக்கு பிறகு குடும்ப கதையில் நடித்து வருவதாக தெரியவருகிறது இதனால் இந்த படத்தில் விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, குஷ்பு, ஜெயசுதா, ஷாம் போன்ற பல முக்கிய நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்து வருகின்றனர்.
இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தை தொடர்ந்து அடுத்து தனது 67வது படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து நடிப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியது. இதற்கு முன் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் படங்களில் பல புதுமுக நடிகர் நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுத்து வருவார். மேலும் அவருக்கு ஒரு சில நடிகர்களை பிடித்து போய் விட்டால் தொடர்ந்து அவரது படங்களில் நடிக்க வைப்பது வழக்கம் அதுபோல் தற்போது விஜய்யின் 67 வது படத்தில் அர்ஜுன் தாஸ், நரேன், ஜாஃபர் ஆகியோருக்கு நடிப்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.