மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மேனன், இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலில் ‘இவன் வேற மாதிரி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து ‘விழா’ என்ற தமிழ் படத்திலும் நடித்திருந்தார்.
மேலும் தமிழில் பிரம்மன், வெத்துவேட்டு, நிஜமா நிழலா ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார் ஆனால் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ள இவர் தற்போது தமிழில் அருவா சண்டை, பேய்மாமா ஆகிய இரண்டு தமிழ் திரைப் படத்திலும் நடித்து வருகிறார்.
இவருக்கு மலையாளத்தில் பட வாய்ப்புகள் கிடைத்தாலும் தமிழில் சொல்லிக் கொள்ளும் படவாய்ப்புகள் அமையவில்லை அதனால் மற்ற நடிகைகளைப் போல் பட வாய்ப்பை எப்படியாவது அடைந்து விடவேண்டும் என புகைப்படத்தை வெளியிட ஆரம்பித்துவிட்டார்.
அப்படி எதார்த்தமாக வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடம வைரலாகி அதிக லைக்ஸ் பெற்று வருகிறது.