தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோவாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் தற்பொழுது தனது 169 வது திரைப்படமான ஜெயிலர் திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க ஜெயில் சம்பந்தப்பட்ட படமாக உருவாகி வருகிறது ரஜினி இந்த படத்தில் வயதான தோற்றத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரஜினி பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. ஒரு நடிகர் சாதாரணமாக ஐந்து வருடம் சினிமாவில் பயணத்தாலே அவரிடம் மிகப்பெரிய அளவில் பணம் இருக்கும்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரை உலகில் 40 வருடங்களுக்கு மேலாக நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார்.
அவரிடமும் பல கோடிக்கணக்கான சொத்துக்கள் இருக்கிறது ஆனால் ரஜினி பெரிதும் ஆடம்பரத்தை விரும்ப மாட்டார் ஏன் அவர் நீங்கள் எப்பொழுதும் பார்த்தாலும் கழுத்தில் ருத்ராட்ச கொட்டை, கையில் ஒரு வாழ்க்கைத் தவிர வேறு எந்த ஒரு பொருளையும் அவர் பெரிதாக அணிந்திருக்க மாட்டார்..
ரஜினி சிம்பிளாக வாழ்ந்தாலும் அவரிடம் பல கோடி இருக்கிறது 2022-ல் ரஜினியின் சொத்து மதிப்பு குறித்து ஒரு தகவல் இணையதள பக்கத்தில் பரவி வருகிறது அதன்படி பார்க்கையில் ரஜினியின் அசையா சொத்து மதிப்பு மட்டுமே 400 கோடி எனக் கூறுகின்றனர். மேலும் ரஜினியுடன் நான்கு வெளிநாட்டுக்காரர் இருக்கின்றன அதன் மதிப்பு மட்டுமே 47 கோடியான கூறுகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் மதிப்பு மட்டுமே 35 கோடி இருக்கும் என கூறுகின்றனர். மேலும் ரஜினிகாந்த் தற்போது ஒரு திரைப்படத்திற்கு குறைந்தது 80 கோடி டு 100 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இது மட்டும் இல்லாமல் அசையும் சொத்துக்களும் அவரிடம் நிறைய இருக்கும் என கூறப்படுகிறது.