தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் பாலா இயக்கத்தில் தன்னுடைய 41 வது திரைப்படத்தில் மிக தீவிரமாக நடித்த வருகிறார் அந்த வகையில் இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஆனது கன்னியாகுமரியில் மிக விறுவிறுபாக நடைபெற்று முடிந்தது.
ஆனால் இந்த படபிடிப்பின் பொழுது பாலா மற்றும் சூர்யா ஆகிய இருவருக்குள் மனக்கசப்பு ஏற்பட்டது மட்டுமில்லாமல் கன்னியாகுமரியில் இருந்து திடீரென சூர்யா கிளம்பி வந்து விட்டார் என தெரிய வந்துள்ளது. ஆனால் அதன் பிறகு இரண்டாவது படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என கூறப்பட்டது ஆனால் தற்போது வரை அந்த பணி நடக்கிறதா இல்லையா என்பது தெரியவில்லை.
அந்த வகையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடத்தப் போவதாக பட குழுவினர்கள் தெரிவித்து இருந்தார்கள் ஆனால் கோவா வேண்டாம் பாண்டிச்சேரியில் செட் அமைக்கப்பட வேண்டும் என சூர்யா கூறியிருந்தால் அதன் காரணமாக பாண்டிச்சேரிியில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு இருந்தது.
அந்த வகையில் கோவா வேண்டாம் என சூர்யா நினைத்தாலும் கோவா அவரை விடுவது இல்லை போல அந்த வகையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படத்தின் லொகேஷன் தேடும் பணியில் சிறுத்தை சிவா ஆரம்பித்துள்ளார் அப்பொழுது அவர் தன்னுடைய படத்தை கோவாவில் எடுக்கலாம் என முடிவு செய்துள்ளார்.
பொதுவாக இயக்குனர் சிவா திரைப்படம் என்றாலே அவை தமிழகத்தில் தொடங்கி கொல்கத்தாவில் முடிவது வழக்கம் தான் அந்த வகையில் தற்பொழுது கோவாவில் முடியும் வண்ணம் திரைக்கதை எழுதியுள்ளார் என தெரியவந்துள்ளது.