வெள்ளித்திரையில் எப்படி நடிகர்களின் படங்கள் மோதுகிறதோ.. அதேபோல சின்னத்திரையிலும் டாப் நடிகர்கள் படங்கள் வெளியாகி யார் டிஆர்பி உச்சத்தில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆசைப்படுவது வழக்கம்.. வெள்ளித்திரையில் எப்படி சூப்பர் ஸ்டார் ரஜினி நம்பர் 1 இடத்தை பிடித்து இருக்கிறாரோ..
அதேபோலவே தான் சின்னத்திரை டிஆர்பியிலும் அவர்தான் இப்பொழுதும் கிங்காக இருக்கிறார். விசேஷ நாட்களில் தொலைக்காட்சியில் புது படங்களை போடுகின்றனர். அதனால் குழந்தைகள் தொடங்கி மக்கள் வரை பலரும் போட்டி போட்டு கொண்டு படத்தை பார்கின்றனர். இதனால் அந்த படம் டிஆர்பி – யில் மிகப்பெரிய ஒரு உச்சத்தை எட்டும்..
அந்த வகையில் ரஜினி பல படங்கள் சின்ன திரையில் வெளிவந்து டிஆர்பி ரேட்டிங்கில் அதிக இடங்களை பிடித்து இருக்கிறது அதிலும் குறிப்பாக சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்து பட்டையை கிளப்பி எத்தனை படம் “பாட்ஷா”. இந்த படம் ஆக்ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு படமாக இருந்ததால்..
குழந்தைகள் முதல் பெரியவர் அனைவருக்கும் பிடித்து போன படமாக இருந்தது. இந்த படத்தில் ரகுவரன், நக்மா, ஆனந்தராஜ் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர் திரையில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த திரைப்படம் சின்ன திரையில் வெளிவந்து டி ஆர் பி யில் சக்க போடு போட்டது.
மொத்தமாக 11.79 ரேட்டிங் எடுத்தது இந்த ரேட்டிங் இன்று வரை அஜித், விஜய் படங்கள் முறையடித்ததே கிடையாதாம் ஏன் நடிகர் கமலால் கூட இந்த ரெக்கார்டை முறையடிக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை. கடந்த 28 வருடங்களாக இந்த record – யை எந்த ஒரு நடிகராலும் முறியடிக்கவே முடியவில்லை என்பதால் டிஆர்பி கிங்காக ரஜினி இன்று வரை இருந்து வருகிறார்.