தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் திரை உலகில் 22 வருடங்களுக்கு மேலாக நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் . தமிழில் இவர் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வலம் வருகிறார். இதுவரை அஜித், விஜய், ரஜினி, கமல், சூர்யா, தனுஷ் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் சோலோ கதைகளிலும் நடிப்பதால் நடிகை திரிஷா மார்கெட் குறையாமல் இருக்கிறது இவர் நடிப்பில் இப்பொழுது வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் பிரம்மாண்டமான வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா.
சூப்பராக நடித்து மக்களின் மனதில் மீண்டும் இடம் பிடித்திருக்கிறார் இந்த படத்திற்கு பிறகு நடிகை திரிஷாவுக்கு வாய்ப்புகள் ஏராளமாக குவியும் என தெரிய வருகிறது . இப்படி இருக்கின்ற நிலையில் திரிஷா குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது ஆம் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் பேட்டி ஒன்றில் திரிஷா குறித்து சொல்லி உள்ளது என்னவென்றால்..
திரிஷா திரைப்படங்களில் நடிப்பது தொடர்பாக சொந்தமாக முடிவெடுப்பது இல்லையாம் எந்த விஷயம் என்றாலும் அவரது அம்மாவை தான் எதிர்பார்க்கிறாராம் ஒரு இயக்குனர் கதை சொல்ல வந்தால் கூட திரிஷா அம்மாவிடம் கதை சொல்ல வேண்டியது இருக்கிறதாம் நடிகைகள் ஆரம்ப காலகட்டத்தில் தனது அம்மாக்களிடம் அனுமதி பெற்றுக்கொண்டு திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்து கொள்வது என்பது தான் வழக்கம்.
ஆனால் இருபது வருடங்களாக டாப் நடிகையாக பயணிக்கும் திரிஷா இப்பொழுதும் தனது அம்மாவிடம் அனுமதி கேட்டு தான் நடிக்கிறார் என்பது ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது என கூறினார். இந்த செய்தி இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.