என் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது இந்த நிகழ்ச்சிதான்..! பல வருடம் கழித்து ஆதங்கத்தை வெளிக்காட்டிய சக்தி..!

sakthi
sakthi

தென்னிந்திய சினிமா உலகில் மிக சிறந்த இயக்குனராக போற்றப்படுபவர் தான் பி வாசு இவர் திரைப்படங்கள் இயக்குவது மட்டுமல்லாமல் தயாரிப்பிலும் அதிக ஆர்வம் காட்டி வந்தார் அந்த வகையில் இவருடைய திறமையை எழுத்தாளர் கதை ஆசிரியர் நடிகர் என பல்வேறு வகையில் வெளிக்காட்டியுள்ளார்.

இவர் திரை உலகில் சிறந்த இயக்குனராக இருந்தாலும் இவருடைய மகன் சக்தியால் இன்று வரை தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வளர முடியவில்லை.நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் தொட்டால் பூ மலரும் என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் இவர் கதாநாயகனாக நடித்துள்ளார் ஆனால் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் சொல்லும்படி ஹிட் கொடுக்கவில்லை இதனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் எப்படியும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வாய்ப்புகள் கூடும் என எண்ணியிருந்த நிலையில் அவருக்கு ஏமாற்றம் தான் மிச்சம்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் கார்த்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் நான் இப்படி ஒரு நிலைமைக்கு ஆளாகி விட்டேன். இது என்னுடைய அறியாமையால் நடந்த தவறு எனவும் நான் யார் மீதும் குறை சொல்ல போவது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பிறகு தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்திக்க ஆரம்பித்தேன். அதுமட்டுமில்லாமல் அந்த நிகழ்ச்சிக்கு செல்லும்போது நான் மன அழுத்தத்துடன் தான் கலந்து கொண்டேன் அதேபோல அந்த நிகழ்ச்சியில் பல்வேறு செலிபிரிட்டி கலந்துகொள்ள உள்ளார்கள் என்று கூறினார்கள்.

ஆனால் பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற பிறகு தான் தெரிந்தது அது நான் ஒருவர் தான் ஹீரோ ஓவியா ஒருவர்தான் ஹீரோயின்.  மேலும் இந்த நிகழ்ச்சியில் ஓவியாவிற்கு நல்ல பெயரை சம்பாதிக்கும் வகையில் நல்ல எண்ணங்களை காட்டிவிட்டு என்னை கெட்டவராக காட்டி என் மீது ரசிகர்கள் அவதூறு கூறும் வகையில் ஏற்படுத்தி விட்டார்கள்.

sakthi
sakthi

அதுமட்டுமில்லாமல் எனக்கு பெண் ரசிகர்கள் தான் அதிகம் ஆனால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகாக என்னுடைய பெண் ரசிகர்கள் கூட்டமே குறைந்துவிட்டது.  அதுமட்டுமில்லாமல் பலரும் என்னை ஓவியா போன்று நடந்து கொண்டார்கள்.  இதனால் சில நாட்களாக நான் வெளிவராமல் வீட்டிலேயே இருந்தேன் இதன் காரணமாக குண்டாகவும் ஆகிவிட்டேன் இதனால்தான் நான் எந்த போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.