கார்த்தி நடித்த இந்த திரைப்படம் தான் – “புஷ்பா” மாதிரியான படத்தில் நடிக்க என்னை தூண்டிவிட்டது – ஓபன்னாக சொன்னா அல்லு அர்ஜுன்.

allu-arjun
allu-arjun

சினிமா உலகில் வித்தியாசமாக வெளிவரும் திரைப்படங்கள் எப்பொழுதும் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் அந்த வகையில் தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் காதல், ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்தவர் அல்லு அர்ஜுன்.

தற்போது முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா. இந்த திரைப்படம் முற்றிலும் காடு மற்றும் மலைகளை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படம் வருகின்ற 17ஆம் தேதியை உலக அளவில் வெளியாக இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் அல்லு அர்ஜுன் சில தகவல்களை கூறி இருக்கிறார். அதாவது தமிழ் சினிமாவில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய திரைப்படம் பருத்திவீரன் முரட்டுத்தனமான கிராமத்து பின்னணியில் இந்த படம் வேற லெவல் இருந்தது இந்த காரணத்தினால்தான் மக்கள் மட்டும் ரசிகர்களும் இந்த படத்தை வேற லெவெலில் கொண்டாடினார்.

இந்த திரைப்படத்தை போல நானும் ஒரு திறந்த திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் அது ஆரம்பத்தில் கிடைக்கவில்லை இப்படி இருந்த நிலையில் அந்தப் படத்தை மையமாக வைத்து பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்து ஹிட்டடித்த உள்ளன அது போன்று நான் காத்துக் கொண்டிருந்த நிலையில் சுகுமார் அடிக்கடி என்னிடம் பேசுவார்.

அது போன்ற படங்கள் இருப்பதாகவும் சொன்னார் அப்படியே அவர் இயக்கத்தில் ரங்கஸ்தலம் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது அதுபோன்று இன்னொரு படம் இருப்பதாக என்னிடம் சொன்னார் நான் கதையை கேட்டேன் சிறப்பாக இருந்ததால் புஷ்பா படத்தில் நடிக்கும் வாய்ப்பை கைப்பற்றி நடித்தேன் என கூறினார்.