ரஜினிக்கு வில்லனாக ஜெயிலர் படத்தில் இந்த நடிகர்தான்.! சன் பிக்சர் வெளியிட்ட அதிகார பூர்வ அறிவிப்பு

jailer
jailer

இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜெய்லர். இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் மேலும் இந்த திரைப்படம் சென்னையில் ஒரு பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு உருவாகிய வருகிறது.

மேலும் ரஜினி நடித்து வரும் ஜெய்லர் திரைப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது மேலும் இந்த திரைப்படத்தை முன்னணி இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் இசையமைத்துள்ளார். தற்போது ஜெய்லர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து தற்போது உள்ள முன்னணி நடிகர்களின் படமான வாரிசு, துணிவு படத்தில் இருந்து அப்டேட்டுகள் வெளியாகி கொண்டே இருக்கும் நிலையில் ரஜினி நடித்து வரும் ஜெய்லர் படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது இந்த நிலையில் தற்போது ஜெய்லர் படம் குறித்த ஒரு அப்டேட் வெளியாக உள்ளது.

ஆம் நவம்பர் 17ஆம் தேதி (இன்று) மாலை 6:00 மணிக்கு ஜெய்லர் படத்தின் ஸ்டில்ஸ்கள் வெளியாக உள்ளதாக ஜெய்லர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது இதனை தொடர்ந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளிவராமல் இருந்து வந்த ஜெய்லர் திரைப்படத்தின் புதிய அப்டேட் இன்று வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் ஜெய்லர் படம் குறித்து எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

விரைவில் ஜெய்லர் திரைப்படத்தின் அடுத்த அடுத்து அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக ரஜினியின் திரைப்படங்கள் சரிவர ரசிகர் மத்தியில் வரவேற்பு பெறவில்லை ஆனால் ஜெயிலர் திரைப்படம் ரஜினிக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரும் என்று நம்பப்படுகிறது.

இந்த நிலையில் ஜெயிலர் படத்தில் சிவ ராஜ்குமார் கனடா நடிகர் நடிக்க இருக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.